எட்டாவது மற்றும் கடைசி P 8 I நீர்மூழ்கி அழிக்கும் விமானத்தை இந்தியாவிற்கு வழங்கியது அமெரிக்கா

எதிரி நீர்மூழ்கி கப்பல்களை தேடி அழிக்கும் விமானங்களை இந்தியா மற்றும் உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன, அதிலும் அமெரிக்காவின் P 8 I விமானம் தான் சிறப்பானதாக கருதப்படுகிறது, நவீன தலை முறையை சேர்ந்த இந்த விமானத்தை தான் அமெரிக்க கப்பல் படை பல கடல் சார்ந்த தேவைகளுக்கும் எதிரிகளின் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளை தேடவும் பயன் படுத்தி வருகிறது. இந்தியாவும் இந்த விமானத்தை வாங்க அமெரிக்காவிடம் கேட்டிருந்தது, எனவே அமெரிக்கா பாதுகாப்பு துறையிடம் விமான தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டது, அவர்களும் அனுமதி கொடுத்தனர்.

முதல் கட்டமாக எட்டு விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடனும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடமும் சுமார் 13,000 கோடி ருபாய் ஒப்பந்தத்தில் 2009 இல் கையெழுத்திட்டது இந்தியா , இதில் எட்டு P 8 I விமானங்கள், ஏவுகணைகள், குண்டுகள் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும் விஷேச கருவிகள் மேலும் பல உதிரி பாகங்களும் அடங்கும்.

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மூன்று வருடத்தில் முதல் P 8 I விமானத்தை இந்தியாவிற்கு வழங்கியது, இதை தமிழ் நாட்டின் சென்னை அருகே கப்பல் படை நிலை நிறுத்தியது, வங்காள விரிகுடா பகுதியில் சீன கப்பல் படையின் நடமாட்டத்தை கண்காணிக்க இது அதிகம் பயன்படுத்தப்படும் என்று கப்பல் படை தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வருடங்களிலும் விமானங்களை டெலிவரி செய்து வந்தது, கடைசி மற்றும் எட்டாவது விமானத்தை நேற்று இந்திய கப்பல் படை அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் வழங்கினர்,

மேலும் இதன் திறனை பார்த்து மேலும் அதிக எண்ணிக்கையில் வாங்க பாதுகாப்பு துறையிடம் கேட்டிருந்தது இந்திய கப்பல் படை, அதன் படி மேலும் சுமார் நான்கு விமானங்கள் வாங்க பாதுகாப்பு துறை அனுமதி கொடுத்தது, அதன் ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது, மேலும் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் இன்னும் சுமார் 12 விமானங்கள் வாங்கும் கோரிக்கையையும் பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தம் மூலம் இந்த விமானத்தின் ஆர்டர் சுமார் 16 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கப்பல் படை மட்டுமே இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறது, இந்த விமானத்தை மிக நெருங்கிய தோழமை நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

வானில் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து சுமார் நான்கு மணி நேரம் இந்த விமானம் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும், மேலும் எதிரி கப்பல்களை அழிக்க ஏவுகணைகள், நீர்மூழ்கிகளை அழிக்க டோர்பெடோக்கள், மற்றும் கடலில் கண்ணி வெடிகளை வீசும் திறனும் இதற்கு உள்ளது.