INS விஷால் விமானம் தாங்கி போர்க்கப்பல்

இந்திய கப்பல் படை புதிய நவீன ரக விமானம் தாங்கி போர்க்கப்பலை INS விஷால் என்ற பெயரில் கட்ட தீர்மானித்துள்ளது, அடிப்படையில் இதன் திறன் அமெரிக்க கடல் படையின் நிமிட்சு ரக விமானம் தாங்கி கப்பலை ஒத்தது, இதன் மொத்த எடை சுமார் 65,000 டன்களுக்கு மேல் இருக்குமாறும் அணு உலை பயன்படுத்தி அதன் சக்தியை பெறவும், மேம்படுத்தப் பட்ட கவண் முறை அல்லது மின்காந்த அடிப்படையில் நவீன கன ரக போர் விமானங்களை ஏவும் படியும் வடிவமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் அணு உலையால் இயங்கும் நவீன ரக போர் கப்பல்களை வைத்திருக்கும் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பட்டியலில் மூன்றாவதாக சேர உள்ளது.

கப்பலின் மொத்த நீளம் = 300 மீட்டர்
கப்பலின் வேகம் = 30 நாட்ஸ்
வீரர்கள் எண்ணிக்கை = 1500 பேர்,

இந்த கப்பலில் சுமார் 35 கன ரக போர் விமானங்களும், சுமார் 20 ஹெலிகாப்டர்களும் நிறுத்துமாறு வடிவமைக்கப்படவுள்ளது.

சர்வதேச அளவில் பெரிய கப்பல்களை கட்டும் அமெரிக்க நிறுவனமான Northrup Gruman , பிரிட்டனின் BAE பிரான்ஸ் நாட்டின் DCNS மற்றும் ரஷ்ய அரசின் Rosboronexport ஆகிய கம்பனிகளிடம் உதவி கோரப் பட்டுள்ளது, இந்த நிறுவனங்கள் இந்தியாவின் ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்யும் படி ஒப்பந்தம் செய்யப்படும்.

ஏற்கனவே கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆசியாவின் மிக பெரிய கப்பலான இன்ஸ் விக்ர்டந்த் என்ற போர்க்கப்பலை கட்டி முடித்து வெள்ளோட்டமும் விட்டு விட்டது, எனவே புதிய இந்த கப்பலும் அங்கே கட்டப்பட வாய்ப்பு அதிகம்.