ராணுவத்தில் ஆளில்லா உளவு விமானங்கள்

 

இந்திய ராணுவத்தில் ஆளில்லா சிறிய உளவு விமானங்களை சேர்க்க இந்திய நிறுவனங்களிடம் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது, அதின் சில குறிப்பிட்ட அம்சங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஒரு ராணுவ தொகுதிக்கு, சுமார் மூன்று சிறிய உளவு விமானங்களும், எளிதில் எடுத்து செல்லக் கூடிய ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு, விமானத்தை விண்ணில் ஏவவும் திரும்ப மீட்கவும் பயன்படும் அமைப்பு, ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் மற்றும் வீடியோவை பார்க்கும் அமைப்பு, மற்றும் பலவகையான சென்சொர் அமைப்புகளும் இருக்க வேண்டும்.

மேலும் இதன் மொத்த எடை 35 கிலோவிற்குள் இருக்க வேண்டும், விமானம் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சுமார் 45 நிமிடங்கள் வானில் உலாவ வேண்டும்,

இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் எத்தனை விமானங்கள் வேண்டும், விலை மற்றும் ஒப்பந்த காலம் ஆகியவை வெளியிடப்படவில்லை, இதற்கு முன்னரும் 2012 இல் ராணுவம் அறிவித்த இதே போன்ற ஒப்பந்த புள்ளி இன்னும் நிலுவையில் உள்ளது,