பினாக்கா II ராக்கெட்டை இந்த வருட இறுதிக்குள் சோதனை செய்ய திட்டம்

பினாக்கா 2 ரக ராக்கெட்டுகளை இந்த வருட இறுதிக்குள் சோதனை செய்து சீக்கிரமாகவே படையில் சேர்க்க திட்டமிட்டுள்ளது இந்திய ராணுவம், பினாகா-வானது ஒரு பல குழல் ராக்கெட் ஏவும் அமைப்பு ஆகும், இதில் சுமார் 214 mm குறுக்களவு உடைய 12 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் ஏவ முடியும், இதன் தாக்கும் தொலைவு சுமார் 60 கிலோமீட்டர் தூரம் ஆகும், பழைய மார்க் 1 ரக ராக்கெட்டுகளால் 40 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை மட்டுமே தாக்க முடியும்.

மார்க் 1 ரக பினாக்கா ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது, மேலும் பினாக்கா 2 ரக ராக்கெட்டுகள் ஏற்கனவே பல சோதனைகளை கடந்து விட்டது, அது தற்போது உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது, இருப்பினும் பயனரான இந்திய ராணுவத்தின் சோதனை வெற்றி பெற்றால் மட்டுமே படையில் சேர்த்துக் கொள்ளப்படும், எனவே சோதனை செய்து முடித்ததும் மார்க் 2 ரக பினாக்காவை அதிக அளவில் உற்பத்தி செய்து ராணுவத்திற்கு கொடுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.

மேலும் பினாகா ராகேட்டுகளை வழிகாட்டும் அமைப்பு சேர்த்து துல்லியமாக தாக்க, புதிய வழிகாட்டும் அமைப்பும் சோதனை முயற்சியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பினாக்கா முற்றிலுமாக இந்தியாவில் தாயரிக்கப்பட்ட ஒரு ராக்கெட் ஏவும் அமைப்பு, கடந்த 20 வருடங்களாக ராணுவத்தில் செயல்பாட்டில் உள்ளது, இவ்வகை ராக்கெட்டுகளால் ஒரு பெரிய நிலபரப்பை மொத்தமாக அழித்து விட முடியும், ஒவ்வொரு ராக்கெட்டிலும் சுமார் 200 கிலோ வெடிபொருள் வைத்து ஏவ முடியும், 44 வினாடிக்குள் சுமார் 12 ராக்கெட்டுகளை ஒரே இடத்தில ஏவ முடியும்.

  • c.vignesh

    அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.இதன் மூலம் இந்திய ராணுவத்தின் வல்லமையை சாதாரன குடிமகனும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.Jai hind