உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் ஆர்ட்டிலரியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ராணுவம் அனுமதி

முன்னதாக ராணுவத்தின் கடிமனான சோதனைகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குறுகிய எண்ணிக்கையில் முதலில் தனுஷ் ஆர்ட்டிலரிகளை உற்பத்தி செய்ய ராணுவம் அனுமதித்திருந்தது, தற்போது அதன் திறன் மீது உள்ள நம்பிக்கையால் அதிக அளவில் தயாரிக்க ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது, இதன் மூலம் சுமார் 144 ஆர்ட்டிலரிகளை ராணுவ ஆயுத தொழிற்சாலை தயாரித்து ராணுவத்திற்கு வழங்கும்.

ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலை இந்த அனுமதியின் மூலம் முதல் ஆறு மாதங்களில் ஆறு ஆர்ட்டிலரிளையும், அடுத்த 12 மாதங்களில் மேலும் 12 ஆர்ட்டிலரிளையும், அடுத்த 24 மாதங்களில் 36 ஆர்ட்டிலரிளையும் தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளது, மேலும் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் கூட்டத்தில் ராணுவம் கேட்டபடி அடுத்த மூன்று ஆண்டுகளில் 144 ஆர்ட்டிலரிளையும் தயாரித்து கொடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது,

சுவீடன் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட போபர்ஸ் ஆர்ட்டிலரிக்கு பிறகு சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகே ராணுவம் புதிய ஆர்ட்டிலரிகளை வாங்குவது குறிப்பிடத்தக்கது, மேலும் தனுஷ் ஆர்ட்டிலரி சுவீடன் நாட்டின் போபர்ஸ் ஆர்ட்டிலரியை மேம்படுத்தி உருவாகப்பபட்டது.

இந்த 144 ஆர்ட்டிலரிகளின் மொத்த மதிப்பு சுமார் 1260 கோடி ரூபாய் ஆகும், ராணுவத்தில் இது சிறப்பாக செயல்பட்டு, ஆயுத தொழிற்சாலையும் நல்ல தரத்தில் இந்த ஆர்ட்டிலரிகளை உற்பத்தி செய்து சரியான கால நேரத்தில் கொடுத்தால் இது போல இன்னும் 400-க்கும் மேல் ஆர்ட்டிலரிகளை வாங்க ராணுவம் உத்தேசித்துள்ளது,

ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையும், உற்பத்தியை வேகப்படுத்த நவீன உபகரணங்களையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது, இதன் மூலம் உற்பத்தி எண்ணிக்கையை 30-35 வரை அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது,

மேலும் இந்த ஆர்ட்டிலரிகளை வெளிநாடுகளுக்கு விற்பது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

மொத்த எடை : 12 டன், அதனால் ராணுவ லாரிகளின் பின்புறம் மட்டுமே கட்டி ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு கொண்டு செல்ல முடியும், அல்லது பெரிய விமானங்களில் ஏற்றியும் கொண்டு செல்லலாம். இதே வகை மற்ற ஆர்ட்டிலரிகளுடன் ஒப்பிடும் போது தனுஷ் சுமார் 2 டன் வரை எடை குறைவு தான்.

மின்னணு சாதனங்கள் மூலம் இதன் துல்லிய தன்மை சுமார் 2 மீட்டருக்குள் தாக்குமாறு இருக்கும்.

வெட்ட வெளி பகுதிகளில் சுமார் 37 கிலோ மீட்டர் வரை சரியாக குறி பார்த்து சுடும், மலை பிரதேசங்களில் கொஞ்சம் வேறுபாடும் இருக்கும்.

ஒரு நிமிடத்திற்கு எட்டு குண்டுகள் வரை சுடும்,

இந்தியாவின் எல்லா கால நிலை மற்றும் சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.