பாதுகாப்பு படைகளுக்கு நவீன துப்பாகிகள் வழங்க மத்திய அரசு முடிவு, அமைச்சர் கிரண் தகவல்

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை பாதுகாப்பு படை மற்றும் காவல் அதிரடிப்படை வீரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் அதி நவீன துப்பாகிகளை வழங்க அரசு முடிவெடித்திருப்பதாக இந்திய உள்துறை விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் கிரண் தெரிவித்துள்ளார்.

கான்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு பொருட்கள் ஆராய்ச்சி அமைப்பில் பேசும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார், அவர் மேலும் கூறும் போது இந்தியாவால் நுணுக்கமான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க முடியாது என்று மக்கள் நினைப்பதாகவும், இந்தியாவின் பாதுகாப்பு படைகள் மற்ற நாடுகளை விட குறைந்த அளவிலேயே நுணுக்கமான ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் பலர் நம்புவதாகவும் தெரிவித்தார், ஆனால் வரும் காலங்களில் இது போன்ற குறைகள் களையப்பட்டு நமது ராணுவமும் அதி நவீன ஆயுதங்களைக் கொண்ட ராணுவமாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பாதுகாப்புப் படை இரு அமைச்சரவையின் கீழ் உள்ளது, உள்நாட்டு பாதுகாப்பு உள்துறை அமைச்சகத்திடமும், முப்படைகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழும் இயங்குகின்றன, எனவே இரு அமைச்சரவைளும் உள்ள அதிகாரிகள் இணைந்து ஒரு நிலையான திட்டம் வகுத்து மொத்த பாதுகாப்பு படைகளுக்கும் நவீன ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார், இதன் மூலம் ஆயதப் பற்றாக்குறையையும் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்,

இந்திய பாதுகாப்பு தொழில் நிறுவனகள் அதிக தரத்தில் உள்ள பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இவைகளுக்கு வெளிநாட்டில் அதிக அளவில் வரவேற்ப்பு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்,

நவீனப்படுத்துதலில் முதல் முக்கிய அம்சமே பாதுகாப்பு படைகளுக்கு நவீன துப்பாகிகளை வழங்குவது தான் என்றும் அவர் கூறினார்.