ராணுவத்திற்கு கவச வாகனங்களை செய்ய TATA விருப்பம்.

 

இந்தியாவின் தனியார் நிறுவனமான TATA Motors ராணுவத்திற்கு பல்அச்சு கொண்ட லாரிகளை வழங்கி வருகிறது, சமீபத்திலும் சுமார் 900 கோடி மதிப்பில் 1200 லாரிகளை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டது.

அடுத்த தலை முறையில் சண்டையிட ராணுவத்திற்கு கவச வாகனங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன, ஏற்கனவே படையில் இருக்கும் ரஷ்யாவில் உருவான இந்தியாவின் OFB தயாரித்த BMP 2 ரக கவச வாகனங்களை மாற்றி புதிய நவீன ரக கவச வாகனங்களை கொள்முதல் செய்ய ராணுவம் உத்தேசித்துள்ளது.

இதன் படி சுமார் 60,000 கோடி செலவில் 2500-க்கும் மேல் புதிய கவச வாகனங்களை இந்திய ராணுவம் அடுத்த 10 ஆண்டுகளில் படையில் சேர்க்கும்.

இந்த கவச வாகங்களில் தானியங்கி 30 துப்பாக்கிகள், எதிரியின் முன்னணி கவச வாகனங்களை தாக்கி அழிக்க ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன்பு டெல்லியில் நடந்த ஆயுத கண்காட்சியில் டாட்டா தனது கவச வாகனமான KESTRAL-ய் அறிமுகப்படுத்தியது. இதில் ஆயுதம் தாங்கிய 9 வீரர்களை ஏற்றி செல்ல முடியும்.

இந்திய ராணுவம் முதலில் குறிப்பிட்ட அளவு கவச வாகனகளை சேர்க்க TATA-வின் kestral கவச வாகனத்தை சோதனை செய்து வருகிறது.