இங்கிலாந்து நாட்டிடமிருந்து ஹோவர்கிராப்ட் ஊர்திகளை வாங்குகிறது இந்திய ராணுவம்

 

நீரிலும் நிலத்திலும் மிதந்து செல்லும் ஹோவர்கிராப்ட் ரக ஊர்திகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது, இதில் எடை குறைந்த ஹோவர்கிராப்ட் 44 -கும், எடை அதிகமான ஹோவர்கிராப்ட் 16 -ம் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இருக்கும் இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நாட்டு நிறுவனம் கோவாவிலுள்ள இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து இவைகளை இந்தியாவிலேயே செய்யவுள்ளது,

இந்த ஒப்பந்தத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்து, தயாரிக்கும் பணிகளை முடுக்கி விட ராணுவம் முடிவெடுத்துள்ளது, எல்லைப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை வேவு பார்க்கவும் எளிதாக நீரிலும் நீருக்கு அருகில் இருக்கும் பரப்பிலும் வேகமாக செல்ல இவை பெரிதும் பயன்படும், இது போன்ற ஹோவர்கிராப்ட் ரக ஊர்திகள் கப்பல் படையிலும் கடலோர காவல் படையிலும் ஏற்கனவே அதிகம் செயல்பாட்டில் இருக்கிறது, இருப்பினும் ராணுவத்திடம் இதுவரைக்கும் இவைகள் இல்லை, எனவே அதிகரித்து வரும் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் தடுக்கவும் இவை அதிகம் பயன்படும்.

சிறிய ரக Griffon 2400 TD ஹோவர்கிராப்ட், சுமார் 7 டன் எடை கொண்டது, மேலும் அதிக திறனுள்ள ஒரு என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது, இதன் மூலம் இது சுமார் 35 கடல் மைல் வேகத்தில் நீரில் செல்லும், இதில் வீரர்கள் மற்றும் வாகனங்களை ஏற்றி செல்ல முடியும், சுமார் 3.5 டன் வரை சாதனங்களை ஏற்றலாம், இதில் ஒரே ஒரு துப்பாக்கி மட்டுமே இருக்கும், இருப்பினும் இதில் மேலும் பல துப்பாக்கிகளை பொருத்திக் கொள்ள முடியும்,

பெரிய Griffon 8100 TD ஹோவர்கிராப்ட் சுமார் 12 டன் எடை கொண்டது, இதில் இரண்டு எஞ்சின்கள் உள்ளது, இது 12 டன் வரை சுமைகளை எடுத்து செல்லும், மேலும் இதில் சுமார் 55 பேர் வரை பயணம் செய்ய இட வசதியும் உள்ளது, இதன் உச்ச வேகம் மணிக்கு சுமார் 40 கடல் மைல்,