வீரர்களை ஏற்றி செல்லும் BMP 2 கவச வாகங்களை மேம்படுத்துகிறது இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட BMP 2K ரக கவச வாகனங்களை வீரர்களை ஏற்றி செல்ல பயன்படுத்துகிறது, போர் நடக்கும் போது எதிரிகளின் குண்டுகளோ ராக்கெட்டுகளோ இந்த வாகனத்தை தாக்கினாலும் உள்ளே இருக்கும் வீரர்களுக்கு எவ்விவாத பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்திய ராணுவத்திடம் தற்போது 1500க்கும் மேல் BMP 2K ஊர்திகள் உள்ளது, இவை அனைத்தையும் இந்தியாவின் மேதாக் நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலை உற்பத்தி செய்து ராணுவத்திற்கு அளித்து வருகிறது,

இதில் சுமார் 950 வாகனங்களே, ராணுவத்தின் வீரர்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது, மற்றவை வேறு சில வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, ராணுவத்தின் வீரர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டும் நவீனப்படுத்தி புதிய ஆயுதங்களை சேர்க்க ராணுவம் முன்பே திட்டமிட்டிருந்தது, சுமார் $2 பில்லியன் இதற்கு செலவாகும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது, இதை ரஷ்யாவின் உதவியோடு இந்தியாவில் செய்ய அரசு மேதாக் நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதற்கான இறுதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது,

இந்த மேம்படுத்தும் முயற்சியில், புதிய அதிக திறனுள்ள என்ஜின் சேர்க்கப்படும் இதனால், வேகமும் மலைகளின் ஏறும் திறனும் மேம்படும், இந்த வாகனங்கள் நீரிலும் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை,

இந்த வாகனங்களில் புதிதாக 3-ம் தலை முறை டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளது, இவை தானாகவே எதிரி டாங்குகளை குறி வைத்து தாக்கும்,பழைய ஏவுகணைகள் எதிரி டாங்கை தாக்க ஒரு வீரரின் உதவியை எதிர்பார்க்கும் , இதனால் உதவி செய்யும் வீரரின் உயிருக்கு கூட ஆபத்து நேரிடலாம், ஆனால் புதிய ஏவுகணைக்கு இது தேவைப்படாது,

பழைய வாகனங்களில் இருக்கும் 12.7 mm கன ரக துப்பாக்கிகளை நீக்கி, புதிய கையெறி குண்டுகளை வீசும் துப்பாக்கி சேர்க்கப்படவுள்ளது, இது அருகில் இருக்கும் இலக்குகளை தாக்க அதிகம் பயன்படும், குறி தவறினால் கூட இதனால் பாதிப்பு மிக அதிகம்,

மேலும் இதில் இரவு நேரத்தில் துல்லியமாக தாக்கவும் செயல்படவும் புதிய மின்னணு சாதனங்களும், தானியங்கி குறி பார்க்கும் அமைப்புகளும் இதில் சேர்க்கப்படவுள்ளது.