எல்லையில் சுற்று சுவர் அமைக்க இந்தியா திட்டம், பாகிஸ்தான் எதிர்ப்பு

எல்லைக் கட்டுபாட்டுக் கோடு அருகில் பெரிய சுற்று சுவரை இந்தியா கட்டி வருகிறது, இதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு வேலி அமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அது இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே உள்ளது, அந்த வேலிக்கும் புதியதாக அமைக்கப்பட்டுவரும் வேலிக்கும் இடையே தூரம் அதிகம், அதாவது சர்வதேச எல்லைப் பகுதியை ஒட்டி இந்த புதிய சுவர் எழுப்பப்படும், இஸ்ரேலின் உதவியுடன் கட்டப்படும் இந்த புதிய சுவர் ஊடுருவலைத் தடுக்கவும், போரின் போது ஒரு நல்ல தடுப்பாகவும் இருக்கும்.

இந்த புதிய சுவர் சுமார் 197 கிலோமீட்டர் தூரம் நீளமும், சுமார் 10 மீட்டர் உயரமும் இருக்கும், இதில் நவீன சென்சார் கருவிகள், இருட்டிலும், பனி சூழ்ந்த நேரமும் பார்க்கும் வகையிலான தெர்மல் காமிராக்கள், பொருத்தப்பட்டிருக்கும், மேலும் இதன் மேல் பகுதியில் மின்சாரமும் இருக்கும், இது போன்ற வேலிகள் அமெரிக்க மெக்சிக்கன், சவூதி இராக் மற்றும் இஸ்ரேல் பாலஸதீன பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் எல்லைக் கட்டுபாட்டு பகுதிக்கு அருகில் இந்தியா இவ்வாறு வேலி அமைப்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் ஐ.நா வில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது,