இந்திய ராணுவத்தை தடுக்க அணு ஆயுதம் பயன்படுத்தப்படும், பாகிஸ்தான் வெளியுறவு செயலர்

 

பாகிஸ்தானின் வெளியுறவு விவகாரங்களுக்கான செயலர் ஆசிஸ் சவுத்ரி கூறும்போது, இந்திய ராணுவத்திற்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஒரு வேளை போரின் போது இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையைக் கடந்தால் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தவே பாகிஸ்தான் மண்ணில் அவை பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

முதல் தடவையாக இதை பாகிஸ்தான் ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமூட்டுவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் இந்திய ராணுவத்தை உடனடியாக எல்லையில் குவிக்கும் திட்டமான Cold Start – ஐ இந்தியா பயன்படுத்தும் என்பதை பாகிஸ்தான் நன்கு அறியும் என்றும், இந்தியா போன்ற பெரிய ராணுவத்தை பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாது என்று அவர்களுக்கும் தெரியும் என்றார்.

அடுத்து வரும் போர்களில், நவீன மயமாக்கப்பட்ட இந்திய ராணுவம் முதல் 24 மணி நேரத்திலேயே சர்வதேச எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதலை ஆரம்பித்து விடும், பல வகையான விமான மற்றும் ஏவுகணைகள் உதவியுடன் முன்னேறும் இந்திய ராணுவத்தை தடுக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் ஒரே வழி அணு ஆயுதங்கள் தான், அதுவும் அணு ஆயுதங்கள் அவர்கள் நாட்டிலேயே தான் வீச வேண்டும், இதன் மூலம் ஒரு சில சட்ட சிக்கல்களையும் தடுக்க முடியும்.

பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் கவலையூட்டுவதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தது, மேலும் அணு ஆயுத உற்பத்தியை குறைக்கும் படியும் பாகிஸ்தானை நிர்பந்தித்து வருகிறது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானிடம் அதிக எண்ணிக்கையில் குறைந்த திறனுள்ள அணு ஆயுதங்களும், இந்தியாவிடம் குறைந்த எண்ணிக்கையில் மிக அதிக திறனுள்ள அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றன, மேலும் இந்தியாவிடம் அதி நவீன மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டை செலுத்தும் விமானங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் அவ்வகை ஏவும் அமைப்புகள் இல்லை என்றும் தெரிவிகின்றனர் .