அதிக அளவு யுரேனியத்தை சேமிக்க பெரிய குடோன்களை கட்டுகிறது இந்தியா

இந்தியா அதிக அளவு யுரேனியத்தை இருப்பு வைத்துள்ளது, ஆனால் இதை சேமித்து பாதுகாப்பாக வைக்க போதிய வசிதிகள் இல்லை, எனவே சுமார் 5000 முதல் 15000 மெட்ரிக் டன் அளவு யுரேனியத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய குடோன்களை கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

சமீபத்தில் கஜகஸ்தான் சென்றிருந்த பிரதமர், அந்த நாட்டிடமிருந்து சுமார் 5000 மெட்ரிக் டன் அளவு யுரேனியத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார், கஜகஸ்தான் இதை பல தவணைகளில் இந்தியாவிற்கு வழங்கும், மேலும் இது போல ஒப்பந்தங்கள் கனடா மற்றும் ஆஸ்த்ரேலியா நாடுகளிடமும் போடப்பட்டுள்ளது.

இந்த குடோன்களை நிரப்பி விட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யுரேனிய தட்டுப்பாடு வராது. புதிய இந்த குடோன் ராஜஸ்தான் மாநிலத்தில் அமையவுள்ளது, இது போன்ற ஒன்று ஏற்கனவே ஹைதராபாத் நகரில் செயல்பாட்டில் உள்ளது.

700 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கும் ஒரு அணு உலைக்கு ஒரு வருடம் சுமார் 125 மெட்ரிக் டன்கள் யுரேனியம் தேவைப்படும்.

உள்நாட்டிலேயே சுமார் 1200 மெட்ரிக் டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்படுகிறது.