அந்தமான் அருகே சீன போர் கப்பல்கள்

இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகே சீன போர் கப்பல்களின் நடமாட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது, எனவே அங்கு மேலதிகமான படைகளை நிலை நிறுத்தவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக அந்தமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த விமான, கப்பல் மற்றும் தரைப்படை கட்டுப்பாட்டு அமைப்பாக அந்தமான் கட்டளை செயல்பட்டு வருகிறது, இது சீனாவில் படைகளை எதிர்க்க அமைக்கப்பட்ட முப்படைகளின் ஒரு தாக்கும் அமைப்பு, ஆனால் மூன்று மாதங்களுக்கு இரு முறை சீன கப்பல்கள் இந்த தீவுகளுக்கு அருகில் வர முயற்சி மேற்கொள்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சீனா கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தமான் பகுதிக்குள் நுழைய முற்படுவதாகவும், ஆனால் இந்திய படைகள் சரியான நேரத்தில் அவர்களை வர விடாமல் தடுப்பதாகவும் தெரிவித்தார்,

அவர்களை தடுப்பதற்கு போதிய ஆயுதங்களுடன் கூடிய கப்பல்கள் இதுவரை அந்தமான் கட்டளை அமைப்பிற்கு இல்லாதது தான் சீனாவின் தொடர்ந்த முயற்சிகளுக்கு காரணம் என்றும், ஒரு சில சிறிய ரோந்து கப்பல்களும் மற்றும் சில LST கப்பல்களுமே அந்தமான் பகுதியில் இருப்பதாகவும், அவற்றில் எந்த வித ஆயுதங்களோ அல்லது ஏவுகணைகளோ இல்லை என்றும், தீவில் கூட எவ்வித ஏவுகணைகளும் இல்லை என்றும் அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்,

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கிடையில் சீன போர்க்கப்பல்கள் வருவதாகவும், அவர்களை தடுக்கும் பெரிய போர் கப்பல்கள் எதுவும் அங்கு இல்லை என்றும், கூறினார், மேலும் அதிகாரிகள் குறிப்பிடுகையில், இந்தியாவைத் தாக்கும் முன்பு அவர்கள் அந்தமான் தீவை தான் முதலில் தாக்குவார்கள் என்றும் அதன் மூலம் இந்தியாவை எளிதில் தாக்க முடியும் என்றும் இந்திய வணிக கப்பல்களையும் எளிதில் தாக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்,

மேலும் சீனா தனது கட்டுபாட்டில் உள்ள கோகோ தீவை நவீனப் படுத்தி அதன் விமான ஓடுபாதை தூரத்தை 8 கிலோ மீட்டரிலிருந்து 10 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது, இதனால் பெரிய விமானங்கள் கூட எளிதில் தரை இறங்கி செல்ல முடியும், இதனால் போரின் போது சீனா நம்மை விட அதிக பலத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கட்டுபாட்டில் உள்ள கோகோ தீவு இந்தியாவின் அந்தமான் தீவிலிருந்து வெறும் 30 மைல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இது பற்றி பல முறை இந்திய அரசிற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் அந்தமான் அதிகாரிகள் தெரிவித்த போதும் எவ்வித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.