நேரம் சென்று விட்டது, என்ன செய்யப்போகிறது இந்தியா

2107-இல் இந்தோ பூட்டான் சீன எல்லைப்பகுதியில் பூடானின் நிலத்தில் ராணுவ கட்டமைப்புகளை அமைக்க முயன்ற சீன ராணுவத்தை இந்திய ராணுவம் தடுத்து இதுகுறித்து ஆட்சேபம் தெரிவித்தது. இந்த முதல் ஆட்சேபத்தை இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் வெற்றி என்று அறிவித்து சீனாவை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக கூறியது, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு சாலை வழி செல்ல வேண்டுமானால் இந்த குறுகிய பாதை வழியாகத் தான் பயணிக்க வேண்டும். அதனால் இப்பகுதியில் சீனாவின் எவ்வித ராணுவ கட்டுமானமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பாதையை தடுக்கும் நடவடிக்கையே ஆகும். பொய்யான வெற்றியை கொண்டாடிய அனைவருக்கும் தற்போதைய உண்மை நிலை பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் கட்டுமானங்களை கட்டவிடாமல் செய்ய தவறிய இந்திய அரசும் ராணுவமும், தற்போது நிலைமை கைமீறி சென்று விட்டதால் அப்பகுதியில் சீனாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாமல் உள்ளது, டோக்லாமின் மும்முனை பகுதி அல்லது இந்தியாவின் கோழி கழுத்து பகுதியில் மட்டும் புதிதாக இரண்டு வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் இரண்டு ஜாமிங் அமைப்புகள் கூடவே ஒரு ஹெலிகாப்டர் தளமும் புதிதாக சீனா அமைத்துள்ளது,

இந்த கட்டுமானம் இந்திய ராணுவமோ அல்லது இந்திய விமானப்படையோ அப்பகுதி வழியாக சென்றால் அல்லது போரின் போது அப்பகுதியை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சித்தால், பெரும் இழப்புக்களை தான் சந்திக்கும். மேலும் ராணுவம் தனது மொத்த சக்தியியுடன் மோதினாலும் இரும்புக்கோட்டை போல் அப்பகுதியில் உள்ள சீனாவின் கட்டுப்பாட்டை உடைக்க இயலாது. இதனால் போர் என்று வந்தால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை சீனாவிடமிருந்து காப்பது என்பது மிகக்கடினம். டோக்லாமை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் சீனாவின் பேச்சுக்கு இந்தியா கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

டோக்லாம் பகுதி, சீனாவின் கட்டுமானங்கள் – 27°17’38.2″N 88°54’49.4″E

2017-இல் அப்போதே பொய்யான வெற்றியை கொண்டாடாமல் பின்வரும் ஆபத்தை அறிந்து அப்போதே சீனாவை எதிர்த்து நின்றால் நிலைமை இவ்வளவுக்கு மோசமாகியிருக்காது. இனி அதைக்குறித்து பேசியும் பயனில்லை. சண்டையில்லாமல் அப்போரில் வென்றது சீனா.

2020-இல் சீனா கோக்ரா மற்றும் பாங்காங் ஏரிக்கரை பகுதியில் இந்திய ரோந்து வீரர்களை தடுத்த போதே, இந்தியா முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் பேச்சுவார்த்தைகள் என்று மாதங்களை கடத்தி பிங்கர் 3 வரை முன்னேறியது மட்டுமல்லாமல், முன்னேறிய பகுதிகளில் ராணுவ கட்டுமானங்களையும் நிறுவி வருகிறது, ராணுவ கட்டுமங்களை கட்ட மில்லியன் அளவு செலவு செய்திருக்கும் சீனா, ஆனால் அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் பேச்சுவார்த்தை என்ற சீனாவின் ஆயுதத்தால் ஒவ்வொருமுறையும் இந்தியா வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் எப்போதும் ஏப்ரல் மாத நிலைக்கு முன் உள்ள நிலைக்கு செல்ல வேண்டும் என்று முன்வைக்கப்பட்டாலும், சீனா தொடர்ந்து கைப்பற்றிய பகுதிகளில் மில்லியன் டாலர் செலவில் புதிய கட்டுமானங்களை நிறுவி வருகிறது.

குறிப்பாக இந்தியாவுக்கு வேறு வழியில்லை, பேச்சுவார்த்தை மூலம் தான் சீனாவை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது, காரணம் எல்லையின் மொத்த பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மிக அதிக அளவில் உள்ளது. மேலும் இது நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்தும் வருகிறது, சீனா முதலில் முன்னேறிய போதே கடிவாளம் போட்டிருந்தால் இந்தியாவின் பக்கமும் கொஞ்சம் பலம் இருந்திருக்கும், ஆனால் தற்போது நாளுக்கு நாள் நிலைமை கைமீறி சென்றுகொண்டிருப்பதால், இந்தியாவால் பேச்சுவார்த்தையை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை தான் ஏற்பட்டுள்ளது.

இந்திய மக்களை சமாளிக்க அரசும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் டோக்லாமில் எவ்வாறு ஒரு பொய்யான வெற்றியை கொண்டாடியதோ அது போல தற்போதும் சீனாவின் எல்லைக்குள் உள்ள பிளாக் டாப் மலை குன்று, ஹெல்மெட் டாப் மலைக்குன்றுகளை கைப்பற்றியதாக செய்திகளை பரப்பி வருகிறது, 99% இந்திய மக்களும் அதை நம்பி லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா வெற்றி கொண்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியா ரஷ்யாவிடம் வாங்கிய விமானங்களை வைத்து சீனாவுடன் போரிட முடியாது, பிரெஞ்சு நாட்டு விமானகளைத்தான் பயன்படுத்தியதாக வேண்டும், இந்திய விமானப்படையை முற்றிலுமாக செயல்படாமல் செய்ய சீனா எல்லை முழுவதும் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது, ஏன் இந்துக்களின் புனித தலமான கைலாய மலை அருகே நவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுவியுள்ளது.

சீனாவின் கடந்த மூன்று வருட ராணுவ கட்டுமானங்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு இருக்கிறது. டோக்லாம் போலவே பொய்யான வெற்றியை கொண்டாடி வரும் பலர் வரப்போகும் பேராபத்தை குறித்து அறிய வாய்ப்பில்லை. டோக்லாமில் எவ்வாறு கட்டுமங்களை ஏற்படுத்தி அப்பகுதியை தன கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோ, அது போலவே லடாக் பகுதியையும் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும். அதனால் சீனா மொத்த எல்லைப்பகுயிலும் வைக்கும் சட்டத்தை தான் இந்தியா பின்பற்ற வேண்டி வரும்.

தலைப்புப்படம் -stratfor, detersfa