மலாக்கா பகுதியில் இந்திய கப்பல் படை திடீர் போர் பயிற்சி, சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தும் இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவி பாங்காக் ஏரிக்கரை பகுதி, டெப்சாங் பகுதி, கல்வான் பகுதிகளை சீனா கடந்த மே மாத துவக்கத்தில் கைப்பற்றியது, மேலும் அப்பகுதியில் ஆர்டில்லரி மற்றும் டாங்கிகளையும் குவித்துள்ளது, கல்வான் பகுதியின் PP14 பகுதியில் நடந்த சண்டையில் இந்தியா தனது வீரர்களை இழந்தது, சீனாவுக்கும் இதில் பேரிழப்பு ஏற்பட்டது, நிலைமையை சமாளிக்க ராணுவ தலைமை கமாண்டர் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இருப்பினும் சீனா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை, மாறாக மேலதிக படைகளையே அப்பகுதியில் குவித்து சண்டைக்கு தயாராகி வருகிறது, இந்திய தரப்பும் பதிலுக்கு படைகள், டாங்கிகள் மற்றும் ஆர்டில்லரிகளை அப்பகுதியில் குவித்துள்ளது.

இரு மாதமாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை, சீனா கைப்பற்றிய பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளது மிக தெளிவாக தெரிகிறது, மேலும் அப்பகுதியில் சண்டை இல்லாமல் இழந்த பகுதிகளை மீட்க முடியாது என்பதும் தெளிவாகவே தெரிகிறது, பாங்காக் பகுதிக்கு சென்று பாதுகாப்பு அமைச்சர் வீரர்களிடம் ஆற்றிய உரையில் கூறும்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படும் என்பதில் உறுதியில்லை என்று கூறினார், இது மேற்கூறிய தெளிவுகளை உறுதிப்படுத்துகிறது.

மேலும் எல்லைப்பகுதியில் நிலைமையை சமாளிக்க, சீனாவை வேறு வழியில் கையாள இந்தியா முடிவெடுத்துள்ளது, கடந்த மாதம் கப்பற்படையை நகர்த்தி அந்தமான் அருகே போர் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று ஒரு சில யூகங்கள் வெளியாகின, தெற்காசியாவுக்கு செல்லும் எல்லா கப்பல்களுமே, ஏன் சீனாவின் 97% கப்பல் போக்குவரத்து அந்தமானுக்கு அருகில் உள்ள மலாக்கா நீரிணை வழியாகவே செல்கிறது.

அப்பகுதியில் செல்லும் சீன கப்பல்களை இடையூறு செய்தால் சீன பொருளாதாரம் மிக வெகுவாக பாதிக்கப்படும், அதன் எண்ணெய் கொள்முதல், ஆப்ரிக்காவில் இருக்கும் சீன சந்தை, ஐரோப்பாவை இணைக்கும் கப்பல் போக்குவரத்து அனைத்துமே மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும்,

மலாக்கா வழியாக வரும் சீன கப்பல்களை இடைமறித்து அதை சோதனை செய்வது, கப்பல்களை நிறுத்தி அல்லது மெதுவாக போக சொல்லி கட்டளையிடுவது போன்ற வேலைகளை செய்யும் போது, மேற்கொண்டு எந்த சீன கப்பல் போகவேண்டுமானாலும் அது போர்க்கப்பல் உதவியுடனேயே செல்ல வேண்டியதாக இருக்கும், இது சீனாவை மற்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் திசை திருப்பி மலாக்கா நீரிணையை பாதுகாப்பதை முதல் வேலை ஆக்கும்.

ஏற்கனவே, தென் சீன கடலில் அமெரிக்கா இந்தோனேசியா போன்ற நாடுகள் மாபெரும் கப்பற்படை பயிற்சியை மேற்கொண்டுவருகின்றன, கூடவே முன்னெப்போதும் இல்லாமல் அமெரிக்கா இரண்டு விமானம்தாங்கி கப்பல்களை தென் சீன கடலில் நிறுத்தியுள்ளது, இது சீனாவுக்கு சிக்கலை மேலும் அதிகமாக்கும்.

ஆனால் மலாக்கா பகுதியில் சீன கப்பல்களை இடையூறு செய்வது என்பது போருக்கு சமம், ஒருவேளை மலாக்கா பகுதியில் இந்தியா சீன கப்பலைகளை இடையூறு செய்தால், நிச்சயம் எல்லை பகுதிகளில் இந்தியாவை சீனா தாக்கும், மேலும் அது சிறிய அளவிலான தாக்குதலாக இருக்காது, நிச்சயம் பெரிய அளவில் நிலத்தை கைப்பற்றி இந்தியாவை அடி பணிய செய்யும் அளவுக்கு முயற்சிக்கலாம், காரணம் இந்தியாவை மலாக்கா பகுதியில் வைத்து சீனாவால் கையாள்வது மிகக்கடினம், மேலும் ஒரு வார காலம் மலாக்காவில் சீன போக்குவரத்து தடை பட்டால் அதுவே சீனாவுக்கு ,பொருளாதார ரீதியாக பெரும் இழப்பில் முடியும் . மேலும் வர்த்தக கப்பல்களை தாக்கினாலோ இடையூறு செய்தாலோ நிச்சயம் உலகநாடுகளின் கண்டனத்திற்கு இந்தியா ஆளாகும், ஆனால் தற்போதைய நிலையில் சீனாவின் போக்குக்கு யார் கடிவாளம் போட்டாலும் அதை எந்த வகையில் போட்டாலும் ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளுமே ஆதரவு தான் கொடுக்கும்.

இருதரப்பும் சண்டை இல்லாமல் கைப்பற்றிய நிலத்திலிருந்து சீனாவை வெளியேற்ற கடைசி முயற்சியாகவே இந்தியா கப்பல்படையின் இந்த போர் பயிற்சியை நடத்தி வருகிறது, இது சீனாவுக்கு ஒருவிதத்தில் எச்சரிக்கை மணி தான், எல்லையில் ஒருவேளை சீனா இன்னும் முரண்டுபிடித்தால் இந்தியா மேற்கூறிய வழிகளை முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது அந்தமான் பகுதியில் நடக்கும் கப்பல் படை பயிற்சியில், அந்தமான் கட்டளை பிரிவு, கிழக்கு கப்பற்படை கட்டளை ஆகிய இரண்டும் கலந்துள்ளது, இந்த பயிற்சியை கிழக்கு கட்டளை பிரிவு காமாண்டிங் அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் தலைமையேற்று நடத்துகிறார். சுமார் 30-க்கும் அதிகமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

படத்தில் நீர்மூழ்கி போர் முறையில் அதிகம் ஆராய்ச்சி செய்த சுட்டோன் என்பவர் குறித்துள்ள சீன கப்பல் போக்குவரத்து மலாக்கா நீரிணை இந்திய கப்பல் படையால் தடுக்கப்பட்டால் சீனா எவ்வாறு வர்த்தகம் செய்யும் என்பதும் உள்ளது.