வான் தாக்குதலில் அசகாய சூரன் F 15 விமானத்தை MRCA சோதனைக்கு அனுப்ப அமெரிக்கா தயார்

போர் விமான சண்டை தொகுப்பை இரண்டு விதமாக பிரிக்கலாம், BVR ஏவுகணைகளுக்கு முன், BVR ஏவுகணை வருகைக்கு பின், BVR ஏவுகணை வருகைக்கு பின் இது வரை போர் விமான சண்டையில் அசைக்க முடியாத வெல்ல முடியாத வீரனாக இருப்பது F 15 விமானமே, ரஷ்ய விமானங்களை ஓட ஓட விரட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அடித்து துவம்சம் செய்துள்ளது இந்த F 15, பெயரளவுக்கு இல்லாமல், ரஷ்யாவின் அதி நவீன MiG 25, MiG 29 விமானங்களையும் தாக்கி அழித்துள்ளது, அதே நேரம் ஒரு எதிரி விமானங்களால் கூட இதை நெருங்க கூட முடியவில்லை.

இந்தியா சுமார் 110 விமானங்களை மேக் இந்த இந்தியா திட்டத்தின் கீழ் வாங்கவுள்ளது, 2000-ஆவது ஆண்டிலேயே துவங்கிய இந்த கொள்முதல் திட்டம் பல காரணங்களால் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது, தற்போதைய சோதனையில் 5 நாடுகளை சேர்ந்த 7 விமானங்கள் போட்டியிடுகின்றன, குறிப்பாக ரஷ்யா, Su 35 மற்றும் MiG 35 விமானங்களையும், அமெரிக்கா F 21 மற்றும் F 18 விமானங்களையும் போட்டிக்கு அனுப்பிவைத்துள்ளது, தற்போதைய நிலையில் போட்டி என்று வந்தால் ஏற்கனவே ஒருமுறை வென்ற ரபேல் விமானம் தான் வெல்லும், அதற்கு அடுத்தபடியாக கிரிப்பன் அல்லது F 21 வர வாய்ப்புள்ளது,

இவற்றுடன் போட்டியிட்டால், ரஷ்ய விமானங்களுக்கு ஒரு புள்ளிகள் கூட கிடைக்காது, இது ஏற்கனவே நடந்த சோதனையிலும் உறுதியாகியுள்ளது, கடந்த முறை நடந்த போட்டியில் ரஷ்ய MiG 35 கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது,

நவீன தரத்துக்கு ஒரு போர் விமானம் கூட இந்தியாவால் தயாரிக்க முடியாது என்பதால் அவசர கால நிலைக்காக பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 36 போர் விமானங்களை வாங்கியது, அதே நேரம் 52 மிராஜ் மிராஜ் விமானங்களை அதிக விலை கொடுத்து நவீனப்படுத்தியது, இவை மட்டுமே இந்திய விமானப்படையில் நம்பிக்கைக்குரிய விமானங்களாக இருக்கின்றன,

ரஷ்யாவிடமிருந்து வாங்கிய விமானங்கள் பாகிஸ்தானின் F 16 விமானங்களுக்கு அளவு போதிய தரத்துடன் இல்லை, இதை முன்னாள் விமானப்படை தளபதி தனோவாவும் ஒப்புக்கொண்டுள்ளார், MiG 29 விமானங்களை வாங்க வேண்டாம் என்று அப்போது வற்புறுத்திய முன்னாள் விமானப்படை தளபதி லீ போன்டியின் கூற்றுகளும் தற்போதே அரசுக்கு வெளிப்பட்டுள்ளது.

பெரும் விமானப்படை என்று கூறிக்கொள்ளும் இந்திய விமானப்படை தொழில்நுட்பம் என்று வந்தால் இன்றய கூற்றுக்கு தாய்லாந்து நாட்டு விமானப்படையிடம் கூட தோற்றுப்போகும், ரபேல் விமானம் இந்த வருடம் மே மாதம் வரும்போது மட்டுமே பாகிஸ்தான் விமானப்படையை விட பலம் பெறும், அதோடு உள்நாட்டு தயாரிப்பு என்று கூறி வரும் தேஜாஸ் விமானங்கள் போர் என்று வந்தால் பாகிஸ்தானிய போர் விமானங்களிடம் எளிதில் வீழ்ந்து விடும், தேஜாஸ் மட்டுமல்ல, விமானப்படையின் முதுகெலும்பு என்ற சுகோய் விமானங்கள் கூட பாகிஸ்தானின் F16 விமானங்களுக்கு ஈடு கொடுக்காது,

பின் ஏன் சுகோய் விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது என்றால், அதற்கு இரு காரணங்களே இருக்க முடியும்

1) சுகோய் விமானம் சுமார் 10 டன்னுக்கும் மேல் வெடி பொருட்களை சுமந்து செல்லும், ஆனால் அது கூட துல்லியமாக தாக்கும் வெடி பொருட்கள் இல்லை, 1960 களில் பயன்படுத்தப்பட்ட சாதாரண வெடி பொருட்களே, கார்கில் போரில் பாகிஸ்தானின் நிலைகளை தாக்க ஏன் மிராஜ் மற்றும் ஜாகுவார் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, மிக் 29 மற்றும் 21 விமானங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று இப்போது யோசித்துக்கொள்ளலாம்,  கடந்தவருடம் பாகிஸ்தானின் பாலக்கோட்டை தாக்கவும் ஏன் மிராஜ் தேர்வு செய்யப்பட்டது, சுகோய் எதற்குதான் பயன்படும் என்றும் யோசிக்கலாம்,

2) HAL நிறுவனத்தை தொடர்ந்து இயங்க செய்யவும், இந்தியாவும் போர் விமானங்களை செய்கிறது என்று செய்தித்தாளில் பிரசுரிக்கவுமே சுகோய் விமானங்கள் விமானப்படையில் இருந்து வருகிறது.

தற்போது வரவிருக்கும் MRCA போட்டியில் ரஷ்ய விமானங்கள் இறுதி இடத்திற்கு தள்ளப்படும் என்றாலும், அடிமட்ட விலைக்கு இந்த விமானங்கள் கிடைக்கும் என்பதாலே அவை இன்னும் பங்கு கொண்டுவருகின்றன.

ஆனால் திடீரென அமெரிக்கா நவீன F15 விமானத்தை ஏன் இந்திய MRCA திட்டத்துக்கு கொண்டு வருகிறது என்றால், ஏற்கனவே கூறியது போல இன்னும் ஒரு முறை போட்டி வைத்தாலும் பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானமே வெல்லும், அமெரிக்காவின் ஏனைய F 21 மற்றும் F 18 நிச்சயம் தோற்கத்தான் செய்யும்,ஆனால் F 15 விமானம் வந்தால் நிலைமை வேறு

ஒரு வேளை F15 விமானமும் ரபேல் விமானமும் நேருக்கு நேர் வரும் பட்சத்தில் உட்சபச்ச போட்டி இரு விமானங்களும் நிலவும். இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல, இதுவரை இருந்த காலத்தில் F15 விமானம் சிறப்பாக செயல்பட்டுள்ளதோடு போரில் வெல்லமுடியாத அசுரன் என்ற பட்டத்தோடும் வலம் வருகிறது, அதே நேரம் அதற்கு கடும் சவாலை ரபேல் விமானமும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை,

F15 விமானத்தை வைத்து ரஷ்ய விமானங்களை, ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தினசரி ஆட்டம் காட்டுவிக்கிறது இஸ்ரேலிய விமானப்படை, ஈராக்கில் இருந்த அணுமின் மற்றும் அணு உற்பத்தி நிலையத்தை அழிக்க இஸ்ரேல் பயன்படுத்தியது இந்த விமானத்தை தான்,

அதெல்லாம் பழைய கதை இப்போது நவீன யுகம் என்பதால் தான், F15 EX விமானத்தை போட்டிக்கு கொண்டுவந்துள்ளது, ஆசியாவின் சிறந்த விமானப்படையை வைத்துள்ள இஸ்ரேல், கத்தார் அதற்கு அடுத்தபடியாக உள்ள சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னணி தாக்கும் விமானம் இந்த F15 விமானம் தான்,

ஆனால் இந்தியா என்று வரும்போது, இந்த F 15 விமானங்கள் தேவை இல்லாததே என்று கருத முடிகிறது, முக்கிய காரணமாக ஒன்றுக்கும் உதவாத சுகோய் விமானங்களை 250-க்கும் மேல் வாங்கி குவித்துள்ளதே காரணம்,

எனவே உறுதியாக திட்டமிட்டு, வேறு எந்த விமானங்களையும் வாங்காமல் நேரடியாக அமெரிக்காவிடமிருந்து F35 விமானத்தை கொள்முதல் செய்வதே இந்திய விமானப்படைக்கு லாபமும் அதே நேரம் ஆசியாவின் சிறந்த விமானப்படை என்ற பெயரையும் பெறும்,

ஏன் F 35 விமானத்தை இந்தியா வாங்க வேண்டுமென்றால், இந்த MRCA திட்டம் நிறைவேற்றப்பட்டு முதல் விமானம் இந்தியவனுக்கு வர 2030 அல்லது அதற்கு மேல் ஆகும், அதே நேரம் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து நவீன் J 31  5-ம் தலை முறை விமானத்தை வாங்கி பயன்படுத்தும், அவற்றின் முன்பு ரபேல் , F 15 விமானங்கள் திணறத்தான் செய்யும், பாகிஸ்தானின் J31 விமானத்தை எதிர்க்க வேண்டுமென்றால் இந்தியாவுக்கு F 35 விமானம் தான் தேவை

விமானப்படை இப்போதைய நிலையை யோசிக்காமல் எதிர்காலத்தை நினைத்து திட்டம் தீட்டினால் மட்டுமே பாகிஸ்தான் விமானப்படையை வெல்ல முடியும்,

அதோடு சீன விமானப்படையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாதது, சீனாவை ஒரு முழு போரில் அல்லது வான் தாக்குதலில் வெல்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம், அவர்களிடம் J 20 மற்றும் J 31 என இரு 5-ம் தலை முறை விமானங்கள் இருப்பதே. மட்டுமல்லாது அவர்களின் விமானப்படை அமைப்பு அமெரிக்காவை எதிர்கொள்ளுமாறு நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, நாம் பாகிஸ்தான் விமானப்படையை எதிர்கொள்ளவே திணறுகிறோம் இதில் சீனா எப்படி என்று யோசிக்கலாம்

  • சிவனடியார்

    உனது அறியாமையைக் கண்டு படித்த உடன் நான் சிரித்தேன் தம்பி . உலக அரசியல் தெரியாத ஒருவரின் பதிவு என்று எடுத்துக் கொள்கிறேன். இது முழுக்க ஒரு சார்புடைய கருது.

    • SajeevJino

      அதில் உள்ள தவறுகளை கூறலாமே