சீரிய பார்வை இல்லாததால் 27 சுகுவாட் அளவுக்கு குறையும் விமானப்படை

விமானப்படையின் முட்டாள்தனமான திட்டங்களாலும் ரஷ்யா மற்றும் HAL நிறுவனத்தின் தூண்டுதலாலும் விமானப்படை தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது, தற்போது உள்ள மிராஜ் மற்றும் வரப்போகும் ரபேல் விமானங்கள் மட்டுமே கைகொடுக்கும் நிலையில் உள்ளது, மேலும் 2025-க்குள் விமானப்படையின் சுகுவாட்ரன் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 42 சுகுவாடுக்கு பதிலாக வெறும் 25-27 சுகுவாட் தான் இருக்கும், முக்கிய காரணமாக 10 சுகுவாட் மிக் 21 விமானங்கள் மற்றும் ஆறு சுகுவாட் ஜாகுவார் விமானங்கள் படையிலிருந்து விலக்கப்படும், அதே நேரம் வெறும் 2 சுகுவாட் ரபேல் விமானங்கள் மற்றும் ஒரு சுகுவாட் மிக் 29 விமானங்கள்.,ஒரு சுகுவாட் Su 30 விமானங்கள் மட்டுமே படையில் சேர்க்கப்படும், ஒருவேளை 114 விமானங்கள் வாங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதுவும் ஒரு 5 சுகுவாட் தான் வரும், 16 சுகுவாட் விமானங்கள் நீக்கப்பட்டு 9 சுகுவாட் விமானங்கள் தான் சேர்க்கப்படும்

புதிய விமானப்படை தளபதி தலைமையேற்றபின் செய்தியாளர்களிடம் விமானப்படையின் திட்டங்களை தெளிவாக கூறினார், மிக முக்கியமாக 5-ம் தலை முறை விமானங்களை வெளிநாட்டிலிருந்து வாங்கப்போவது இல்லை, அதற்கு பதிலாக நவீன 4-ம் தலைமுறை விமானங்கள் 114-ஐ வெளிநாட்டிலிருந்து வாங்கவும், 83 மாறுதல் செய்யப்பட்ட தேஜாஸ் விமானங்களை வாங்கவும், 1 சுகுவாட் மிக் 29 மற்றும் 1 சுகுவாட் Su  30 விமானங்களை வாங்கவும் அதே நேரம் ஆறு சுகுவாட் ஜாகுவார் விமானங்கள் மற்றும் 10 சுகுவாட் MiG 21 விமானங்களை 2021-க்குள் படையிலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகோய் விமானங்களை நவீனப்படுத்த உள்ளதாகவும் கூறினார்,.

விமானப்படை தளபதியின் இந்த அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை நீக்குவதோடு உறுதியாக விமானப்படை பேராபத்தில் உள்ளதை காட்டுகிறது. இன்றய வாக்கில் இந்திய விமானப்படையிடம் 34 சுகுவாட் விமானங்கள் உள்ளது அவற்றில் 16 சுகுவாட் விமானங்கள் MiG மற்றும் ஜாகுவார் விமானங்கள், அவற்றை 2022-2025 வாக்கில் நீக்கும் போது அதற்கு ஈடாக ஒரு விமானமும் சேர்க்கப்படும் நிலையில் இல்லை, கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்

விமானம் 2020 2025 2030
Su 30 MKI 11 13 13
MiG 29 UPG 3 4 4
Mirage 2000 TI 3 3 3
Jaguar 6 3 0
MiG 21 Bison 5 0 0
MiG 21 Bis, M 5 0 0
Tejas 1 2 2
Tejas MK1A 0 1 4
Rafale 1 2 2
MRCA 2.0 0 1 5
மொத்தம் 34 29 33

 

தேஜாஸ் விமானத்தையும், புதிய மிக் விமானத்தையும் இணைந்தாலும் 26 சுகுவாட் விமானங்கள் வராது,

அதே நேரம் விமானப்படை தேவை இல்லாமல் மிக் 29 விமானங்கள் வாங்குவதிலும், சுகோய் விமானங்களை நவீனப்படுத்துவதிலும் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யவுள்ளது, அதோடு 2030 வரை விமானப்படைக்கு 5-ம் தலைமுறை விமானங்கள் வரப்போவது இல்லை என்பது தெளிவாகிறது.

அதே நேரம் பாகிஸ்தான் விமானப்படை 17 முதல் 20 சுகுவாட் அளவு விமானங்களை இயக்கும், மேலும் இதில் 12-15 சுகுவாட் விமானங்கள் இந்திய எல்லைக்கு மிக அருகே அதாவது 100 கிலோமீட்டருக்குள் இருக்கும்

இந்திய விமானப்படையின் முக்கிய தளங்களான பதன்கோட் மற்றும் ஸ்ரீ நகர் விமான தளங்கள் 2022 வாக்கில் போதிய விமானங்கள் இல்லாமல் இருக்கும், இது விமானப்படைக்கு பெரும் இழப்பே, இந்த விமான தளங்கள் தான் பாகிஸ்தான் விமானப்படையை முதலில் எதிர்க்கும், அதோடு இந்த விமான தளங்கள் ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்களை பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது, இதற்கு முக்கிய காரணம் ஒற்றை எஞ்சின் விமானங்களை இயக்கும் செலவு குறைவு, கூடவே காஷ்மீர் பள்ள தாக்குகளில் சிறப்பாக செயல்படவல்லது

பதான்கோட் விமான தளத்தில் மூன்று MiG 21 சுகுவாட் மற்றும் ஸ்ரீ நகர் விமான தளத்தில் ஒரு MiG 21 சுகுவாட் விமானங்களும் உள்ளது, இதற்கு பதில் விமானப்படை என்ன திட்டம் வைத்துள்ளது என்பது தான் புரியவில்லை, புதிதாக 114 விமானங்களை வாங்க போகிறது என்றாலும் அது எப்போது வரும் என்பது தெரியவில்லை

மொத்தத்தில் முட்டாள்களின் முடிவால் அடுத்த பத்து ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விமானப்படையின் திறன் சரியும்