2025 வரை விமானப்படையை முன்னெடுத்து செல்லவுள்ள மிக் 21 விமானம்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்காரின் முட்டாள்தனமான ஒரு முடிவினால் இந்திய விமானப்படை மிக் 21 போர் விமானங்களை அடுத்த 6 வருடங்களுக்கு அல்லது 2025 வரை படையில் பயன்படுத்த அடித்தளம் அமைத்து சென்று விட்டார், இந்திய விமானப்படையின் முதல் நிலை விமான தளங்களான ஸ்ரீ நகர் ஜோத்பூர் மற்றும் பதான்கோட் அடுத்த 2025 வரை மிக் 21 விமானங்களை மட்டுமே பயன்படுத்தும்.

தற்போது இந்திய விமானப்படையிடம் 10 சுகுவாட்ரான் அளவு மிக் 21 விமானங்கள் உள்ளது அதில் 5 சுகுவாட் அல்லது 100 விமானங்கள் நவீன பைசன் ரகத்தை சேர்ந்தவை, மற்ற 100 விமானங்களும் அதை விட மிக பழைமை வாய்ந்த விமானங்கள்., நவீன பைசன் விமானங்களும் சுமார் 28 வருட பழைமையான விமானங்களே.

பாகிஸ்தான் திடீரென தாக்கும் போது, முதலில் சென்று எதிர்ப்பது மேற்கூறிய மூன்று விமான தளங்களிலுள்ள விமானங்கள் தான், அந்த விமான தளங்களில் உள்ளது மிக் 21 விமானங்கள் மட்டும் தான், பொதுவாக விமான தாக்குதல் வெறும் 10 அல்லது 20 நிமிடங்களில் முடிந்துவிடும், அதற்குள் எதிரி விமானத்தை இடை மறித்து தாக்கி அழிக்க வேண்டும், மேற்கூறிய விமானதளங்கள் பாகிஸ்தானிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது.

இந்த தளங்களில் உள்ள மிக் 21 விமானங்களை நீக்கி புதிய விமானங்களை சேர்க்க வேண்டுமென்றால் நிச்சயம் ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்கள் தான் தேவை, 200 மிக் 21 விமானங்களுக்கு பதிலாக 200 புதிய ஒற்றை எஞ்சின் விமானங்கள் தான் தேவை, HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் தேஜாஸ் விமானம் ஒன்றுக்கும் உதவாது, அமெரிக்காவின் F16  விமானம் தவிர வேறொன்றாலும் மிக் 21 விமானத்துக்கு மாற்றாக இருக்க முடியாது, சுவீடனின் கிரிப்பான் விமானம் நல்ல ஒரு மாற்று தான், ஆனால் சுவீடன் பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அவர்களுடன் கை கோர்ப்பது நல்லதல்ல.

தேஜாஸ் விமானம் விமானப்படை நினைத்த திறனுடன் இல்லாததாலும், ரபேல் விமான கொள்முதல் 36 விமானங்களுடன் நின்று விட்டதாலும் விமானப்படை ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டது, அதற்கான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து சென்றது.

ஆனால் முட்டாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் விமானங்களை விட விமான பாதுகாப்பு ஏவுகணைகள் தான் முக்கியம், S400 வான் பாதுகாப்பு ஏவுகணை இருந்தால் 400 கிலோமீட்டருக்கு அப்பால் வரும் விமானங்களை கூட சுட்டு வீழ்த்த முடியும் என்ற ரஷ்யர்களின் பேச்சுக்கு மயங்கி 6 பில்லியன் விமானப்படையின் பணத்தை ரஷ்யாவுக்கு தாரை வார்த்தார், அதே நேரம் பாகிஸ்தானும் டெல்லியை அணு ஆயுத ஏவுகணையால் தாக்குவோம் என்று கூறவே S400 வான் பாதுகாப்பு ஏவுகணை முக்கியம் என்று ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வைத்தார் அந்த முட்டாள் மந்திரி

அவருக்கு அந்த நேரம் மிக் 21 விமானங்களை நீக்குவது பற்றியோ விமானப்படையின் எதிர்காலம் குறித்தோ எவ்வித அக்கறையும் இல்லை, அவரின் அந்த முடிவு தான் மாதம் ஒருமுறை அல்லது இரு மாதம் ஒருமுறை ஒரு மிக் 21 விமானம் விபத்துக்குள்ளாகிறது. வெறும் விபத்தோடு நின்றுவிடாமல் விமானப்படை வீரர்களின் உயிரையோ அல்லது அவர்கள் அதற்கு மேல் எழுத்து நடமாட முடியாதபடியோ பண்ணிவிடுகிறது.

2019-லேயே இவ்வளவு பிரச்சனையை சந்தித்துக்கொண்டு வரும் விமானப்படை 2022-2025 களின் என்ன செய்ய போகிறதோ. இதுவரை மிக் 21 விமானங்களை மாற்ற எவ்வித திட்டமும் இல்லாததால் 2025 வரை மிக் 21 படையில் இருக்கும், அதன் பிறகு இந்திய விமானப்படையின் முன்னணி விமான தளங்கள் விமானங்கள் இல்லாமல் துருபிடிக்க துவங்கிவிடும்.