இந்தியாவுக்குள் சாலை அமைக்கும் சீனா, மறுத்த ராணுவம், காட்டிக்கொடுத்த செயற்கைகோள் படங்கள்

அருணாச்சல் எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில் சீனர்கள் சாலை அமைத்து வருவதாகவும் 100 கிலோமீட்டர் தூரம் ஊடுருவியதாகவும் அம்மாநில பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்தார், இதை திட்டவட்டமாக மறுத்த ராணுவம் ஊடுருவல் எதுவும் இல்லை என்று கூறியது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினரின் வார்த்தையை ஆராய முற்பட்ட பாதுகாப்புத்துறை வல்லுநர் அபிஜித் மேலதிகமான அதிர்ச்சியூட்டும் தகவல்களை கண்டறிந்து பிரிண்ட் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார், வெறும் செய்தியாக இல்லாமல் தற்போதைய செயற்கைகோள் படங்களை முன்னுதாரணமாக காட்டியுள்ளார்.

அருணாச்சலின் பிஷிங் பகுதிக்கு கிழக்கே ஒரு சிறிய பகுதி அதாவது 40 சதுர கிலோமீட்டர் அளவுக்கு இந்திய பகுதி வெளியில் நீட்டியவாறு உள்ளது, அப்பகுதியை ஆக்கிரமித்து அதை நேர் கோடாக மாற்ற சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது, கீழ்கண்ட கூகுல் மேப்பில் அதை காணலாம், இங்கு தான் சீனா சாலை அமைத்து வருகிறது, மொத்தம் 8 கிலோமீட்டர் நீண்டு வரும் மலை உச்சியில் சாலை அமைத்து அதை தனதாக்கிக்கொள்ள முயற்சித்து, அந்த சாலை வேலைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நிறைவு பெற்று விட்டது,

மஞ்சள் கோடு – சீனாவின் சாலை, இந்திய பகுதிக்குள்ளும் ஒரு கிலோமீட்டர் வரை வருகிறது.
சிவப்பு பகுதி – சீனா ஆக்கிரமிக்க நினைக்கும் இந்திய பகுதி

இங்கு தான் சீனாவின் புல்டோசர்கள் மற்றும் லாரிகளை அங்குள்ளவர்கள் பார்த்ததாக அருணாச்சல் MP தெரிவித்தார், அவருடைய கருத்தை ஒப்பிட்டு பார்க்கையில் புல்டோசர் அல்லது பெரிய சக்கரம் சென்றுள்ளதற்கான அச்சுகளும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது, அங்குள்ள சாலையும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

சீனாவிலிருந்து வரும் இந்த சாலை அப்படியே இந்திய எல்லைக்குள்ளும் நீள்கிறது, அது மட்டுமல்லாது, அந்த சாலை செல்லும் வழியில் சில ராணுவ கண்காணிப்பு நிலையங்களும் கட்டப்பட்டுள்ளது, அவை இந்திய நிலப்பரப்பில் இல்லை, சீன பகுதியில் தான், ஒருவேளை சாலை நீளும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள்ளும் அவர்கள் ராணுவ கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை,

அது மட்டுமல்லாது, எல்லையிலிருந்து வெறும் 8 கிலோமீட்டர் மற்றும் 11 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு ராணுவ தளங்களும் உள்ளது, பொதுவாக இவ்விரண்டு தளங்களிலும் சுமார் 5000 வீரர்களும் அவர்களுக்கு உதவியாக வாகனங்களும் கூடவே ஹெலிகாப்டர் இறங்கும் வசதியும் உள்ளது, இங்கிருந்து வீரர்களையும் ஆயுதங்களையும் இந்திய எல்லைக்கு அருகே வெறும் 30 நிமிடங்களின் சீனாவால் கொண்டு வந்துவிட முடியும்,

அதே நேரம் இந்திய பகுதியை நோக்கினால், எல்லை அருகே எவ்வித இந்திய ராணுவ நடமாட்டமோ அல்லது இந்திய தளங்களோ இல்லை, சீனா இன்னும் சில மாதங்களில் அப்பகுதியை ஆக்கிரமித்து தனதாக்கிக்கொள்ள போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது, இது குறித்து பேசவோ இல்லை விவாதிக்கவோ அரசோ ராணுவமோ தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கைகோள் புகைப்படங்கள் எல்லாவற்றையும் தோலுரித்து காட்டிய போதும் யாரும் அது குறித்து பேசுவாரில்லை.

செயற்கைகோள் படங்களும் அதன் விளக்கங்களும்,

இங்கு கூகுள் மேப்பில் இந்திய எல்லை மற்றும் சீன எல்லை குறிக்கப்பட்டு, மஞ்சள் நிற பின்கள் இந்திய எல்லை அருகே சீனாவின் நிலைகளை காட்டுகிறது,

 

முதல் பின் – Possible Military Base 1 சீனாவின் தளம், எல்லையிலிருந்து வெறும் 11 கிலோமீட்டர்

 

இரண்டாவது பின் – Possible Military Base 2 சீனாவின் தளம், எல்லையிலிருந்து வெறும் 8 கிலோமீட்டர்

 

மூன்றாவது பின் – North Check Point சீனாவின் எல்லை நிலையம், அல்லது கண்காணிப்பு சாவடியாக இருக்கலாம், சாலை தெரிகிறது, இது மேற்கூறிய ராணுவ தளங்களிலிருந்து நீண்டு இந்தியாவுக்குள்ளும் வருகிறது

 

ஐந்தாவது பின் – South Check Point     சீனாவின் மேலும் ஒரு எல்லை நிலையம், அல்லது கண்காணிப்பு சாவடி, இந்திய எல்லைக்கு அருகே வெறும் 1 கிலோமீட்டர் தொலைவில், சாலை நீண்டு வருவதை காணாலாம்
ஆறாவது பின் – சீனா இந்திய எல்லை சாலை தொடர்ச்சி சிவப்பு நிற கோடு தான் இந்திய சீன எல்லை, ஆனால் சாலை தொடர்ச்சியாக இந்திய எல்லைப்பகுதிக்குள்ளும் வருவதைக் காணலாம்,
MP தாகிர் புல்டோசர்கள் உள்ளதாக கூறினார், அதை உறுதிப்படுத்தும் விதமாக பெரிய டயர் அச்சுகள் பதிவாகி இருப்பதை இப்படத்தில் தெளிவாக காணலாம்,

 

இந்த செய்தி மற்றும் தகவல்கள் பிரிண்ட் இணையதளத்தின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியாளர் அபிஜித்தால் எழுதப்பட்டது, அதன் முகவரி சொடுக்கவும்

 

செயற்கைகோள் படங்கள் குறித்த ஆராய்ச்சி, @sbreakintl @detresfa_ 

செயற்கைகோள் படங்கள் வழங்கிய நிறுவனங்கள்: @sentinel_hub  @CopernicusEU