60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் கீழ் இயங்கும் தனி நிறுவனம் தான் GTRE, விமான என்ஜின்களை தயாரிப்பதும் அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் தான் அதன் வேலை, 1959-இல் துவங்கப்பட்ட இந்த அமைப்பு 1961 முதல் DRDO கீழ் கொண்டுவரப்பட்டது, ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களுக்கு என்ஜின் தயாரித்து தரலாம் என்ற வாக்குறுதிகளை மட்டுமே சொல்லி வரும் இந்த நிறுவனம் 60 ஆண்டுகளாக ஒரு உருப்படியான வேலையும் செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து இன்னும் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது இந்த GTRE.

ரஷ்யாவிடமிருந்து முதலில் RD-9F எஞ்சினை வாங்கி ஆராய்ச்சியை துவங்கியது GTRE, இந்த எஞ்சினை மறு வடிவம் செய்து அல்லது பெயிண்ட் அடித்தாவது இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு போர் விமானமான HAL மாருத்-க்கு கொடுக்க நினைத்தது, ஆனால் அதனால் முடியவில்லை, HAL மாருத் பிரிட்டனின் பிரிஸ்டல் என்ஜின் மூலம் தான் இயங்கியது, அதே வேலையை தான் இப்போதும் தேஜாஸ் விமானத்தை வைத்து காவேரி என்ஜினை தயாரித்து தருகிறோம் என்று 30 வருடங்களாக காலம் தள்ளி கொண்டிருக்கிறது.

2014-இல் காவேரி என்ஜின் திட்டத்தை அரசு நிறுத்த சொல்லியும், அதில் சில மாறுதல்களை செய்து பிரான்ஸ் உதவியுடன் கே மற்றும் K9, K10 என்ற பெயரில் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு தான் வருகிறது, அதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை, வெறும் வீண் பேச்சுகளும் உறுதிகளுமே,

உருப்படியாக GTRE செய்த ஒரே எஞ்சின் அல்லது ஓரளவுக்கு நல்லது என்று சொல்லும் எஞ்சின் நிர்பாய் ஏவுகணையில் பயன்படுத்தப்படும் மாணிக் எஞ்சின் தான், உண்மையை சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனியார் வான்வெளி துறை நிறுவனமும் அது போன்ற என்ஜினை தயாரிக்கும், ஏன் அதை விட அதிக திறனுள்ள எஞ்சினை தயாரிக்கும், குறிப்பாக மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனம்.

ஒன்றுக்கும் உதவாமல் எவ்வாறு இந்த GTRE நிறுவனம் சுமார் 1000 பணியாளர்களுடன் ஊதியமும், சுற்றுலாவும், ஆராய்ச்சி என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தையும் எவ்வாறு வீணடிக்கிறது என்று தான் தெரியவில்லை, இதை தனியாருக்கு விற்றால் கூட எந்த நிறுவனமும் வாங்க முன்வராது.

காவேரி என்ற பெயரில் இந்த மக்களை தொடர்ந்து முட்டாளாக்கவே செய்யும் இந்த GTRE