காஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன
காஷ்மீரில் ரோந்து செல்லும் வீரர்கள் மீது தாக்குதலும், கல்லெறி சம்பவங்களும், ராணுவ வாகனங்களை குறிவைத்து கல்லெறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளே, ஆனால் இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதத்தில் வெறும் 40 கல்லெறி சம்பவங்களே நடந்துள்ளது, கடந்த 2018-இல் 1412 கல்லெறி சம்பவங்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம்.
குறிப்பாக 2018 துவக்கத்தில் காஷ்மீரின் மெஹபூபா அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்தியது மத்திய அரசு, இதனால் ராணுவம் கொஞ்சம் அதிக சுதந்திரத்துடனேயே நடந்தது, இதற்கும் மேலாக தேசிய புலனாய்வு அமைப்பையும் (NIA) பெருமளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயன்படுத்தியது,
மத்திய அரசின் அணுகுமுறை புதியதாக உள்ளது. அதுவும் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் குறைய முக்கிய காரணம். குறிப்பாக, முன்பு ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு கொடுக்கப்பட்டுவந்தது, ஆனால் தற்போது தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது தெரியவந்தால் அடுத்த நொடியே படைகள் அந்த தீவிரவாதியை சுற்றி வளைத்து கொன்று விடும், இதனால் பல தீவிரவாத அமைப்புகள் தலைமை இல்லாமல் செயல்பட்டு வருகிறது, இல்லையென்றால் உயிர்பயம் காரணமாக தலைமையின் பெயரை வெளியிடுவது இல்லை. இதனால் தீவிரவாதிகளிடம் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
காஷ்மீர் களத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறிப்பாக தீவிரவாதிகளுக்கும் கல்லெறிபவர்களுக்கும் போதிய பணம் தற்போது கிடைப்பது இல்லை, பண பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டு பண வரவுகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுத்ததே இதற்கு முக்கிய காரணம், முன்பு பாகிஸ்தான் ராணுவமும் அதன் உளவு அமைப்பும் மிக எளிதாக பணத்தை காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வந்தன, தற்போது கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான் மாதம் வெறும் 500 கோடி ருபாய் கூட காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அனுப்ப இயலாமல் உள்ளது,
அது மட்டுமல்லாமல் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்யும் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீதும் தேசிய புலனாய்வு அமைப்பு கை வைத்துள்ளதால், தீவிரவாதிகளுக்கு தற்போது மொத்தத்தில் பணம் இல்லாத பிழைப்பாக மாறி விட்டது. பணவரவு மொத்தமாக நிற்கும் பட்சத்தில் தீவிரவாதிகள் சாப்பாட்டிற்கு தினக்கூலிக்கு தான் செல்லவேண்டிய நிலை வரும், அதுவும் வெகு விரைவில்,
அதோடு, தீவிரவாதிகள் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கும் உள்ளூர்வாசிகளுக்கு இந்திய ராணுவம் அதிக அளவு பணம் பரிசாக கொடுத்து வருகிறது, இதனால் தீவிரவாதிகள் வெளியில் நடமாடவோ, அல்லது ஒரு துப்பாக்கி வைத்திருக்கவோ கூட பயப்படும் நிலையில் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் கல்லெறி சம்பவங்கள் குறித்த தகவல்கள்
வருடம் | சம்பவங்கள் | கைது | சிறை சென்றவர்கள் |
---|---|---|---|
2016 | 2653 | 10,571 | 276 |
2017 | 1412 | 2,838 | 63 |
2018 | 1458 | 3,797 | 65 |
Upto June 2019 | 40 | less than 100 | no data |