உதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை

பால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்றயும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது, ஆனாலும் சுகோய் விமானங்கள் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டன, ஆனால் சுகோய் விமானங்களால் ரஷ்ய ஏவுகணைகளைக்கொண்டு திருப்பி தாக்க முடியவில்லை, காரணம் குறைந்த தாக்கும் தூரம் மற்றும் மிக பழமையான தொழில்நுட்பம், இது குறித்து தணிக்கை துறை 2002-லேயே எச்சரித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தற்போது தான் இந்த ரஷ்ய ஏவுகணைகளை மாற்றாக இஸ்ரேலின் டெர்பி ஏவுகணைகளை வாங்க விமானப்படை பரிசீலித்து முதல் கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் சுகோய் விமானங்கள் விமானப்படைக்கு மாபெரும் முதுகுவலியாகவே இருந்துள்ளது, விமானத்தை பறக்க வைக்கும் செலவு, பராமரிப்பு செலவு, அதன் பெரிய அளவு, நம்பிக்கை இல்லாத ஏவுகணைகள் என்று, சுகோய் விமானங்கள் விமானப்படையை பலவீனத்தில் தான் வைத்துள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பின்பு விழித்துக்கொண்ட விமானப்படை, தற்போது இஸ்ரேலுடன் டெர்பி ER ஏவுகணைகளை வாங்க முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது, இந்திய விமானப்படையின் ஸ்பைடர் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பிலும், தேஜாஸ் விமானத்திலும் டெர்பி ஏவுகணை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது, ஆனால் இது பழைய மாடல் டெர்பி, இதன் தாக்கும் தொலைவு 50-60 கிலோமீட்டர் தான் என்றாலும், ரஷ்யாவின் R 77 ஏவுகணையை விட தாக்கும் தொலைவும் நம்பிக்கையும் அதிகம் வாய்ந்த ஏவுகணை.

2015-இல் டெர்பி ER ஏவுகணையை இஸ்ரேல் அறிமுகப்படுத்தியது, இஸ்ரயேலின் ஐயன் டோம் வான் பாதுகாப்பு ஏவுகணையில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் இரட்டை பூஸ்டர் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது. அமெரிக்காவின் நவீன AMRAAM C7 ஏவுகணைக்கு நிகரான சக்தி கொண்டது, பாகிஸ்தான் பயன்படுத்தும் AMRAAM-ஐ விட நவீன தொழில்நுட்பம்,  மற்றும் தாக்கும் தொலைவும் அதற்கு நிகரானது, மேலும் ஏவுகணை தயாரிப்பாளரான ரபீல் நிறுவனம் கூறுகையில் டெர்பி ER ஏவுகணை, மீட்டார் ஏவுகணையின் திறனைப்போல 80% செயல்படும் அதே நேரம் அதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இதை வாங்கும் செலவு ஆகும் என்று கூறியுள்ளது.

டெர்பி ER ஏவுகணையை சுகோய் விமானத்தில் சேர்க்க விமானத்தின் ராடார் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பில் சிறு மாறுதல்கள் செய்ய வேண்டும், என்றால் மட்டுமே சுகோய் விமானத்தில் இதை பொருத்தி பயன்படுத்த முடியும். இந்த மாறுதல்களை செய்து, டெர்பி ER ஏவுகணைகளை சேர்க்கும் போது சுகோய் விமானங்கள் பாகிஸ்தானின் F16 விமானத்திற்கு நிகரான தாக்கும் சக்தியை பெறும்,

ரஷ்யாவை பொறுத்தவரை பெரும்பாலும் அதன் ஆயுதங்கள் பொய் சொல்லி அல்லது ஊழல் மூலமே செய்யப்படுகிறது, போர் என்று வரும் போது தான் அதன் உண்மை நிலை வெளிப்படும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு ஆயுதங்கள், சரியான விபரங்களுடனேயே விற்கப்படும், அதோடு ஊழல் செய்வதும் மிக கடினம், அதோடு நம்பகத்தன்மையும் வாய்ந்தது.

சுகோய் விமானத்தில் மீட்டார் ஏவுகணையும் சேர்க்க திட்டம் இருந்தது, ஆனால் ரஷ்ய தயாரிப்பு விமானங்களில் அதை சேர்க்க முடியாது என்று ஐரோப்பாவின் MBDA நிறுவனம் மறுத்துவிட்டது, அமெரிக்காவின் AMRAAM ஏவுகணையும் பரிசீலனையில் இருந்தது, ஆனால் அதுவும் கைவிடப்பட்டு, இஸ்ரேலின் டெர்பி ER ஏவுகணை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 100 கிலோமீட்டருக்கு மேல் வரை சென்று தாக்கும் இந்த டெர்பி ER ஏவுகணை, விமானத்தின் ராடார் உதவியோடு அல்லது அதன் உதவி இல்லாமலும் தாக்கும், இலக்கை நெருங்கும் போது தனது இரண்டாவது எஞ்சினை பயன்படுத்தி வேகத்தை அதிகரித்து இலக்கை வேகமாகவும் அதே நேரம் ஏவுகணையை உள்ள நவீன சீக்கரை பயன்படுத்தி இலக்கை உறுதி செய்து இலக்கின் மீது மோதி அழிக்கும், இதனால் இலக்கால் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது,

இந்திய விமானப்படையில் சுமார் 270-க்கும் மேல் சுகோய் விமானங்கள் உள்ளது, ஒவ்வொன்றுக்கும் சுமார் 5 டெர்பி ER ஏவுகணை தேவைப்படும், ஒரு ஏவுகணையின் விலை சுமார் 2 மில்லியன் டாலர் வரை ஆகும், அதோடு எல்லா விமானத்திலும் மாறுதல்களும் செய்ய வேண்டி வரும், இந்த வேலையை துவங்கவே 2020-க்கு மேல் ஆகிவிடும், ஆகவே இந்த திட்டத்திற்கு மட்டும் சுமார் 3 பில்லியன் அல்லது 21,000 கோடி ருபாய் செலவாகும், ரஷ்யாவிடம் ஒரு பொருள் வாங்கினால் இப்படித்தான் செலவுகள் வந்துகொண்டே இருக்கும்,