புதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு

இரு மாதங்களுக்கு முன்பு ரஷ்யா-வுடன் செய்து கொண்ட ஏவுகணைகள் குறித்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, புதிய ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்த தயாராகி வருகிறது, அதே நேரம் இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் சேர்க்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது, இதன் மூலம் சீனாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களையும் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி 500 கிலோமீட்டர் முதல் 5000 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லும் தரையிலிருந்து செலுத்த வல்ல பாலிஸ்டிக் அல்லது குருஸ் ஏவுகணைகளையோ இரு நாடுகளும் தயாரிக்க கூடாது, சந்தேகம் ஏற்பட்டால் பரஸ்பரம் ஒவ்வொரு நாடுகளும் சோதனை செய்து கொள்ளலாம், ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 1991 களிலிருந்து அடுத்த சில வருடங்களிலேயே இரு நாடுகளும் சுமார் 3000 ஏவுகணைகளை அழித்தன, தொடர்ந்து இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கண்காணித்தும் வருகின்றனர்.

ஆனால் கடந்த வருடத்தில் ரஷ்யா தடை மீறி தரையிலிருந்து தாக்கும் சுமார் 1500 கிலோமீட்டர் வரை செல்லும் ஏவுகணையை தயாரித்து படைகளில் சேர்த்தது, இதை அமெரிக்கா பல முறை எச்சரித்தும் ரஷ்யா கண்டுகொள்ளவில்லை, இதனால் கடந்த பெப்ருவரி மாதம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.

அதே நேரம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமால் சீனா தொடர்ந்து இந்த வகை ஏவுகணைகளை தயாரித்து வந்தது, சீனாவுக்கும் சேர்த்து கடிவாளம் போட வேண்டும் என்று அமெரிக்கா பாதுகாப்பு துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதை அடுத்து சீனாவையுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது, சீனாவிடம் ஆயிரக்கணக்கில் இது போன்ற இடைத்தூரம் செல்லும் ஏவுகணைகள் உள்ளது, இது அனைத்துமே இந்தியாவுக்கு எதிராகவும், கிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களையும் தான் தாக்கும். இதனால் சீனாவையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது.

சீனாவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள அமெரிக்கா, அடுத்தகட்டமாக சீனாவின் ராணுவத்துக்கு செலவிடும் தொகையையும் கட்டுப்படுத்த அமெரிக்கா நிர்பந்தித்து ஒப்பந்தத்துக்கு கொண்டு வரவுள்ளது.

அமெரிக்காவின் கட்டுக்குள் சீனா வர மறுக்கும் பட்சத்தில் சீனாவை ஒதுக்கி வைப்பதோடு வேறு பல தடைகளையும் சீனா மீது விதிக்கும், சமீபத்தில் தான் சீனாவின் ஹுவாவி தொலை தொடர்பு நிறுவனத்தை அமெரிக்காவிலும் பல நேச நாடுகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்தது, வர்த்தக ஒப்பந்தத்திலும் சீனாவின் பொருட்களுக்கு கடும் வரி விதித்திருந்தது.

ரஷ்யாவுடனான வேறொரு ஒப்பந்தம் அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம், இதன் படி இரு நாடுகளும் குறிப்பிட்ட அளவு தான் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளையும் குண்டு வீசும் விமானங்களையும் வைத்திருக்க முடியும், இதன் படி ஒவ்வொரு நாடும் வெறும் 1500 அணு குண்டுகளை தான் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும், இந்த ஒப்பந்தமும் 2021-இல் காலாவதியாகிறது, இதிலும் சீனாவை சேர்க்க அமெரிக்கா மும்முரமாக உள்ளது. இதனால் சீனாவின் அணு ஆயுதமும் ஒரு கட்டுக்குள் வரும்.

அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாட்டு ஒப்பந்தம் எவ்வவு வேகமாக வருகிறதோ அவ்வளவு நல்லது இந்த உலகத்துக்கு, இதன் மூலம் மாபெரும் அணு ஆயுத போர், அல்லது மாபெரும் போர் வராமல் தடுக்க வழிவகை செய்யும்.