வான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி

வான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த BVR ஏவுகணைகள்  அடிப்படையான ஒன்று, உலகின் தலை சிறந்த AMRAAM மற்றும் மீட்டார் ஏவுகணைகள் தான் வான் பரப்பை ஆண்டு வருகின்றன, இந்தியாவின் முதல் மீட்டார் ஏவுகணை இந்த வருட இறுதிக்குள் படையில் சேர்ந்து விடும், ஆனாலும் உள்நாட்டு தயாரிப்பு ஒன்று அவசியமாகிறது.

தொலை தூர வான் தாக்கும் ஏவுகணைகளை இயக்க அதிக எஞ்சின் திறனும், அதிக வளைந்து நெளியும் ஆற்றலும் தேவை, மீட்டார் ஏவுகணை ராம்ஜெட் எஞ்சினும் AMRAAM ஏவுகணை ராக்கெட் எஞ்சினையும் பயன்படுத்துகிறது, இரண்டுமே திட எரிபொருளை தான் பயன்படுத்துகிறது, இதில் என்ன பிரச்னை என்றால் இந்த ஏவுகணைகள் 40 கிலோமீட்டருக்கு மேல் இலக்கு இருந்தால் நேர்த்தியாக செயல்படும், அதன் வேகம் சீராக தான் அதிகரிக்கும் அதன் வளைந்து நெளிந்து செல்லும் திறனும் கூட.

தற்போதைய முன்னேறின வான் தாக்கும் யுக்தியில் தொலை தூர தாக்கும் முறையே சிறந்தது,

DRDO சமீப காலத்தில் இரண்டு முறை இது போன்ற ராம்ஜெட் எஞ்சினுடன் கூடிய திட எரிபொருளை பயன்படுத்தும் ஏவுகணையை சோதித்து வெற்றியும் கண்டது, இது ஒரு புரட்சி என்று தான் கூற வேண்டும், காரணம் தொலை தூர ஏவுகணை தயாரிக்க இந்த அடிப்படை எஞ்சின் அமைப்பு இன்றியமையாத ஒன்று, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது DRDO , இதன் மூலம் 200-250 கிலோமீட்டர் தூரமுள்ள வான் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க இயலும்,

ஏவுகணையின் சீக்கர்

வெறும் எஞ்சின் மட்டும் போதாது, இந்த ஏவுகணைக்குள்ளும் இலக்கை தேர்ந்தெடுத்து ஏவுகணையை செலுத்தும் சிறிய ராடார் தேவை, DRDO ஏற்கனவே உருவாக்கிய அஸ்திரா ஏவுகணையில் ரஷ்யாவின் R77  ஏவுகணையை பயன்படுத்தும் சீக்கர் தான் பயன்படுத்தப்பட்டது, பின்பு உருவாக்கிய சீக்கரும் அதை போன்றதே, அதனால் அந்த சீக்கரை பயன்படுத்துவது என்பது முட்டாள்த்தனமான செயல். Barak 8 ஏவுகணையில் அதி நவீன இஸ்ரேலிய சீக்கர் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதை இந்த புதிய ஏவுகணையில் சேர்த்தால், நிச்சயம் மீட்டார் மற்றும் AMRAAM ஏவுகணைகளுக்கு ஈடான ஒரு ஏவுகணையை DRDO தயாரித்து விடும்.

பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் உதவியோடு ராடார் தயாரிப்பில் சிறப்பாக செயல்படும் DRDO, அடுத்தகட்ட முயற்சியாக போர் விமானங்களில் பயன்படுத்தும் ராடார் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது, இனி வரும் காலங்களில் இந்த ராடாரை சோதித்து பார்க்கவும் உள்ளது, உத்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த AESA ராடார், மிக தொலைவு வரை கண்காணிக்காமல் இருந்தாலும் சுமார் 200-250 கிலோமீட்டர் வரை சிறப்பாக செயல்பட்டால் போதும்,

DRDO உத்தம் AESA ராடார்

தரையில் இருக்கும் ராடார்கள் மிகப் பெரியவை, அவை அனைத்துமே இஸ்ரேல் உதவியுடன் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, குறிப்பாக சொல்லப்போனால் அச்சு அசல் காப்பி தான், அதே நேரம் நெத்ரா விமானத்தில் இருக்கும் ரேடாரும் இஸ்ரயேலின் உதவியுடன் செய்யப்பட்டது தான், சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை புகுந்து தாக்கிய போது இந்த நெத்ரா பறக்கும் ராடார் அமைப்பு விமானப்படைக்கு தகவலும் வழிகாட்டலும் கூடவே எதிரியின் அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தது, அதே நேரம் வரும் காலத்தில் தயாரிக்க போகும் மிக பெரிய பறக்கும் ராடார் அமைப்பும் இஸ்ரேலின் உதவியுடன் தான் செய்யப்படவுள்ளது.

உத்தம் தயாரிப்பிலும் இஸ்ரேலின் பங்கு மிக அதிகமாக உள்ளது, தேஜாஸ், மற்றும் ஜாகுவார் விமானங்களுக்கு இஸ்ரேலின் ரேடாரை தான் தேர்வு செய்து வாங்கியது DRDO, அதே நேரம் பெரும் தொகை இந்தியாவில் இந்த ராடாரை தயாரிக்கவும் கைமாற்றப்பட்டது, அதன் பிறப்பே உத்தம் ராடார்,  இஸ்ரேலின் உதவி இருப்பதால் யுத்தம் ராடார் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது,

ஆனால் இதை தேஜாஸ் மற்றும் அனைத்து இந்திய தயாரிப்பு போர் விமானங்களில் பொருத்த வேண்டும், உதாரணமாக இந்தியாவின் தேஜாஸ் மார்க் 2 ரக தேஜாஸ் AMCA விமானங்களிலும்,

தற்போது இந்த விமானங்கள் அனைத்துமே இஸ்ரேலின் ராடாரை தான் பயன்படுத்துகிறது, காரணம் இஸ்ரயேலின் ராடார் வான் தாக்கும் ஏவுகணைகள், தரை தாக்கும் ஏவுகணைகள், கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் என அனைத்துக்குமே உதவி புரியும், கூடவே நம்பகத்தன்மை வாய்ந்தது, அதே நேரம் இந்தியாவின் எந்த ஏவுகணைகளை கட்டுப்படுத்தவும் உதவி புரியும்.

இஸ்ரேலிய ராடருன் இந்த DRDO-வின் புதிய ஏவுகணை ஏவுகணை கச்சிதமாக பொருந்தும், மாறுதல் செய்யப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இஸ்ரேலிய AESA ராடார் கூடவே DRDO-வின் இந்த SFDR ஏவுகணை சேர்ந்தால் நிச்சயம் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள வான்பரப்பை இந்தியா மீண்டும் தான் ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும்.

முக்கிய விஷயமாக இதற்கு மேலும் அதிக அளவு நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை விரைவு படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.