ரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி

கத்தார் அரசு அந்நாட்டு விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்திருந்தது, அதன்படி முதல் ரபேல் விமானம் கத்தார் அரசிடம் கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது, அதே நேரம் கத்தார் விமானப்படை வீரர்களுக்கு ரபேல் விமானத்தை கையாளும் முறை சரி செய்யும் முறையும் குறித்த பயிற்சி தஸால்ட் நிறுவனத்தால் சுமார் 400 கத்தார் விமானப்படையில் பணி புரிபவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பயிற்சி பெற்ற பலரில் பாகிஸ்தான் நாட்டவர் என்றும் பலர் பாகிஸ்தான் விமானப்படையில் உள்ளவர்கள் என்றும் செய்திகள் வெளியானது.

செய்திகள் வெளியானதும், பிரான்ஸ் அரசு மீது பலர் அதிருப்தியோடு கேள்விகள் கேட்டனர், ஆனால் உறுதிகள் எதுவும் சொல்லாமல், அது பொய்யான செய்தி என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டார் டுவிட்டரில் அறிவித்தார். ஆனாலும் இதை அவ்வளவு எளிதில் நம்ப முடியாது, காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் பாகிஸ்தானின் செல்வாக்கு தான்,

ஒவ்வொரு மத்திய கிழக்கு நாடுகளிலும் பாகிஸ்தானின் ராணுவத்தினர் ஏதோ ஒரு வகையில் பணி புரிந்து வருகின்றனர், இது குறித்தும் காரசார விவாதம் பல ராணுவ வல்லுனர்களுடனும் முன்னாள் ராணுவ வீரர்களுடனும் நடந்தது, குறிப்பிடும்படியாக இந்திய விமானப்படையில் பணிபுரிந்த முன்னாள் ஏர் மார்ஷல் அனில் சோப்ரா கூறும்போது, 1985 களில் இந்திய விமானப்படை மிராஜ் விமானங்களை கத்தார் வழியாக இந்தியா கொண்டுவரும்போது, அங்கு இந்திய விமானப்படை வீரர்களை வரவேற்றது ஒரு பாகிஸ்தானிய பிரிகேடியர் என்றார்.

இந்திய கப்பல் படையில் பணியாற்றிய கேப்டன் பிராசத் கூறும்போது, கத்தார் கப்பல்படையில் பணிபுரியும் வீரர்கள் பலர் எகிப்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களே ஆனால் அதிகாரி மட்டுமே ஒரு கத்தார்காரராக இருப்பார்.

கத்தார் மட்டுமல்ல, பல அரபு நாடுகளில் முழு வேலையையும் செய்வது மற்ற நாட்டினரே ஆனால் கையெழுத்து போடும் அங்கீகரிக்கும் அதிகாரியாக மட்டுமே அந்நாட்டவர் இருப்பார், மத்திய கிழக்கில் பணிபுரியும் அநேகம் பேருக்கு இது நன்றாகவே தெரியும்.

கூடவே பாகிஸ்தான் படைகளில் கூட வெளிநாட்டு விமானிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 1971-இல் அமெரிக்கா விமானப்படை அதிகாரி சக் யாகேர் ஓட்டிய பாகிஸ்தானிய விமானத்தை இந்திய கப்பல் படையின் அதிகாரி அட்மிரல் அருண் பிரகாஷ் சுட்டு வீழ்த்திய சரித்திரமும் இதில் அடங்கும், சமீபத்திய இந்திய பாகிஸ்தானிய வான் சண்டையில் இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை ஓட்டியது ஒருவேளை ஜோர்டான் மற்றும் பாகிஸ்தானிய விமானியாக கூட இருக்கலாம் என்ற மர்மமும் இன்னும் நீடிக்கவே செய்கிறது.

இருந்தாலும் தூதரக அறிவிப்போடு நின்று விடாமல், பிரான்ஸ் அரசு சார்பிலும் டஸ்ஸால்ட் சார்பிலும் தெளிவான அறிக்கைகள் வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள், கூடவே இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சாராம்சங்களை பிரான்ஸ் மீறக்கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.