பறக்கும் சவப்பட்டி , மானத்தை வாங்கிய விமானப்படை

இந்திய மக்களின் நீண்ட வருட கனவையும், CRPF வீரர்கள் தாக்குதலுக்கு பதிலடியும் கொடுத்த அதே நேரத்தில் பலத்த அடியுடன் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல விமானப்படை தயாராகி வருகிறது, 1971-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது சர்வதேச எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்று தாக்கியது விமானப்படை, பிறகு இதுவரை விமானப்படையை எல்லை தாண்ட அனுமதிக்கவில்லை அரசு, சுமார் 48 வருடங்களுக்கு பிறகு இரு நாட்களுக்கு முன்பு விமானப்படை சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

சுமார் 12 மிராஜ் விமானங்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன, மொத்தம் மூன்று வெவ்வேறு இடங்கள் தாக்கப்பட்டன, முக்கியமாக பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ் ஏ முஹம்மது தீவிரவாத பயிற்சி தளம், இங்கு மட்டுமே அதிக அளவு குண்டுகள் வீசப்பட்டது, சுமார் 10-15 கட்டிடங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தது, இவை அனைத்துமே ஜெய்ஷ் பயிற்சி மற்றும் தீவிரவாதிகள் தாங்கும் பகுதிகளே, அமெரிக்காவின் உளவு விமான தாக்கும் தொலைவுக்கு வெளியே இந்திய எல்லைப்பகுதிக்கு அருகே அமைத்துள்ள இந்த பகுதி தீவிரவாதிகளின் சொர்க்க புரிதான் ,

வெகு விரைவில் செயற்கைகோள் புகைப்படங்கள் மேற்கு நாட்டு அல்லது அமெரிக்க ஊடகங்களால் வெளியிடப்படலாம், தாக்குதலின் வீரியம் எப்படி இருந்தது என்பது அப்போதே வெளிப்படும்,  உள்ளூர் வாசிகளும், பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரும் இந்திய விமானங்கள் தாக்கியதை உறுதி செய்தனர்.

விஷயம் அறிந்த இந்திய மக்களும் வெகு மகிழ்ச்சியில் இருந்தனர், பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசியது போன்ற உணர்வே ஏற்பட்டது.

தீவிரவாதிகளை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று காலை பாகிஸ்தானின் போர் விமானங்கள் காஷ்மீரின் நௌசேரா பகுதியில் உள்ள இந்த ராணுவ நிலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியது, இதை எதிர்கொள்ள இந்தியாவின் மிக் 21 சென்றுள்ளது, பாகிஸ்தானின் போர் விமானத்தை துரத்தி சென்று பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் சென்றுள்ளது, ஆனால் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று அதை சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்குள் விழுந்த விமான பாகங்களை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியதோடு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனையும் கைது செய்துள்ளது.

பெரும் கேள்வியாக இவ்வளவு பிரச்னைக்குரிய நேரத்தில் விமானப்படை ஏன் மிக் 21 விமானங்களை பயன்படுத்தியது என்பதே,

இந்திய விமானப்படையிடம் சுமார் 250-க்கும் மேற்பட்ட நவீன Su 30 MKI விமானங்கள், 40 மிராஜ் மற்றும் 50 MiG 29 போர் விமானங்களும் உள்ளது.

பாகிஸ்தான் தாக்கலாம் என்ற சந்தேக தகவல் இருந்த போதும், பாகிஸ்தான் விமானங்கள் எல்லை அருகே பறக்கிறது என்ற தகவல் இருந்த போதும் MiG 21 போர் விமானத்தை விமானப்படை ஏன் பயன்படுத்தியது என்ற கேள்வி வெகுவாக முன்வைக்கப்படுகிறது, சிறு உதாரணமாக இந்திய விமானப்படையின் MiG 21, Su 30 MKI மற்றும் இந்திய விமானத்தை சுட்ட பாகிஸ்தானின் JF 17 Blk II விமானத்தின் திறனை பார்க்கலாம்,

Jet Name Radar Name Search Range Maximum Lock Range No Escape Zone
Su 30 MKI  Bars N011M     400 km       140 km    60 km
MiG 21 Bison  Kopyo Spear      60 km         50 km     25 km
JF 17 Blk II   KLJ 7 V2    150 km       75 km      40 km

மேலே கூறிய அட்டவணைப்படி சுகோய் விமானத்துடன் ஒப்பிடும் போது மிக் 21 விமானம் மூன்று மடங்கு திறன் குறைந்ததாகவும், பாகிஸ்தானிய விமானங்களுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு திறன் குறைந்ததாகவும் தெரிகிறது,

அதே நேரம் பாகிஸ்தானின் F 16 விமானத்தையும் நமது MiG 21 விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது, அதன் சிதிலமடைந்த பாகங்கள் பாகிஸ்தானுக்குள் விழுந்ததால்

உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை, இருந்தாலும் F 16 விமானத்தின் சிதிலமடைந்த எஞ்சின் பகுதியின் படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

 

இதனால் எப்படி நவீன விமானங்களுடன் போட்டி போட முடியும் என்று விமானப்படை எண்ணியது என்பது தெரியவில்லை.

இனி படைகளை குவித்தும் சுகோய் விமானங்களை எல்லைக்கு அருகே ரோந்து போக செய்வதும் எவ்வித வகையிலும் பலனளிக்காது, சண்டையை வளர்க்கவும் அரசுக்கு விருப்பம் இல்லை,

முடிவாக அவர்களுக்கு அபிநந்தன் மற்றும் இந்திய MiG 21 விமானத்தின் உதிரிபாகங்ககளும் , நமக்கு பெரிய ஒரு பழமும் கிடைத்தது.

இனியும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் சுடும், நம் மக்களை காயப்படுத்தும், தீவிரவாதிகளை அனுப்பி வீரர்களையும் மக்களையும் படுகொலை செய்யும், தொடர்ந்து நாமும் பழம் சாப்பிடுவோமாக,