பாகிஸ்தான் மீது வான் தாக்குதல், சாத்தியக்கூறுகள் என்ன

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றே பலர் விரும்புகின்றனர், மேலும் முக்கிய இலக்காக கருதப்படும் ஜெயிஷ் தீவிரவாதிகளின் தலைமையகத்தை தாக்க வேண்டும் என்பதே. பகவல்பூர் இந்திய எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியாவின் விமான தளமான சிர்சா சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. அங்கிருந்து தான் விமானப்படை மூலம் பகவல்பூரை தாக்க சிறந்த வழி.

இருந்தாலும் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, பாகிஸ்தானின் விமானப்படையையும் அதன் திறனையும் குறைத்து மதிப்பிட முடியாது. பாகிஸ்தானின் வான் பகுதிகள் கண்காணிப்பு ராடார்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் F16 C/D விமானங்கள் மூலம் கடினமான பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. இவற்றை தாண்டி பாகிஸ்தான் வான் பகுதிக்குள் சென்று தாக்க வேண்டும்.

சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவிரவாத தலைமையகத்தை தாக்கி அழிக்க சுமார் 3000 கிலோ அளவு குண்டுகள் தேவைப்படும், விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குவது தான் எளிதான வழி, ஏவுகணைகள் குறைந்த அளவு வெடி பொருளையே கொண்டு செல்வதாலும், ( உதாரணமாக பிரமோஸ் 300 கிலோ, பாப்பாய் 350 கிலோ ) அதிக அளவு ஏவுகணைகளை ஒரே இலக்கின் மீது செலுத்த வேண்டி வரும். அதனால் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்து அப்பகுதியை தாக்கினால் மட்டுமே முழு அளவு சேதத்தை ஏற்படுத்த முடியும்.

 

பாகிஸ்தான் சுமார் ஆறு AN TPS 77 என்னும் முன் கூட்டியே எச்சரிக்கும் ராடார்களை வைத்துள்ளது. இந்த ராடார்கள் சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் விமானங்கள் ஏவுகணைகள் அனைத்தையும் கண்டுபிடித்து விடும். இந்தியாவுடன் மோதல் நிலை உச்சத்தில் உள்ளதால், இந்திய எல்லைக்கு அருகே சுமார் 100 அல்லது 150 கிலோமீட்டர் தூரத்தில் இவற்றை நிறுவியிருக்கும். இதன் மூலம் இந்திய மேற்கு எல்லையில் உள்ள எல்லா இந்திய விமான தளங்களும் இந்த ராடாரின் கண்காணிப்பில் இருக்கும்.

இந்திய விமான தளத்திலிருந்து ஒரு விமானம் மேலெழும்பினாலும் உடனடியாக அது பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும். அதனால் தான் கடந்த சில நாட்களாக இந்திய விமானங்கள் பறக்க துவங்கியதும் முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானும் தனது விமானங்களை பறக்க விடுகிறது. இந்த ராடாரின் கண்ணிலிருந்து தப்ப எந்த வாய்ப்பும் இல்லை. இந்திய விமான தளத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டாலும் பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும்.

இப்போது சிர்சா விமான தளத்திலிருந்து சுமார் 12 ஜாகுவார் விமானங்கள் ஒவ்வொன்றும் 2 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஜாமர்கள் மற்றும் இலக்குகளை சரியாக குறிவைக்கும் கருவிகள் அதோடு இரண்டு 250 கிலோ குண்டுகளுடன் பகவல்பூரை நோக்கி செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பிரிவுக்கு பாதுகாப்புகாக ஹல்வாரா விமான தளத்திலிருந்து ஆறு சுகோய் மற்றும் இரண்டு MiG 29 UPG விமானங்கள்  வடக்கு பகுதியிலிருந்தும்,  பைகானீர் விமான தளத்திலிருந்து மேலும் ஆறு சுகோய் மற்றும் இரண்டு MiG 29 UPG விமானங்கள் தெற்கு பகுதியிலிருந்தும் செல்லும். கூடவே ஹால்வாராவிலிருந்து ஒரு பால்கன் AEWCS விமானமும் அதியுதவிக்கும் செல்லும், ஆனால் இந்த பால்கன் மட்டும் எல்லையை தாண்டாமல் தாக்க செல்லும் விமானங்களுக்கு எதிரி விமானங்களின் வருகை குறித்த தகவல்களை  கொடுக்கும்.

இந்த மூன்று விமான தளங்களிலிருந்து இவ்வளவு விமானங்கள் புறப்பட்டதும் பாகிஸ்தானின் முன்னறிவிப்பு ராடரான AN TPS 77 பாகிஸ்தான் விமானப்படையை எச்சரிக்கும், இந்த படையை எதிர்க்க பாகிஸ்தான் தொடர்ச்சியாக விமானங்களை வானில் ஏவும், முதலில் தனது AEWCS விமானமான SAAB Erieye -யை வானில் ஏவும், இது வான் பகுதியை கண்காணித்து இந்திய விமானங்களின் இருப்பிடம் பறக்கும் தொலைவு மற்றும் அதன் உயரம் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு வழங்கும்.

இந்திய படையை எதிர்க்க முதலில் தனது வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் செயல்படுத்தும், குறிப்பாக அவர்களிடம் உள்ள SPADA 2000, மற்றும் LY 80 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்து முன்னேறி வரும் இந்திய போர் விமானங்களை அழிக்க தயாராகும். SPADA சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் வரும் எந்த வித பறக்கும் இலக்குகளையும் சரியாக தாக்க வல்லது, பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு, இதன் கண்ணிலிருந்து தப்பிப்பது மிக மிக கடினம், கண்டிப்பாக இவற்றை எல்லை அருகே தான் பாகிஸ்தான் நிறுத்தியிருக்கும், இவற்றை அழிக்காமல் இந்திய படையால் உள்ளே செல்ல இயலாது,

இதனுடன் பாகிஸ்தானின் LY 80 எனப்படும் சீன தயாரிப்பான ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணையும் செயல்பாட்டில் இருக்கும். இதன் திறனையும் குறைத்து மதிப்பிட முடியாது, இதன் தாக்கும் தூரம் சுமார் 40 கிலோமீட்டர்.

இந்தியாவின் ஜாகுவார் விமானங்கள் தாழ்வாக பறந்தாலும் பாகிஸ்தானின் SAAB Erieye விமானம் கண்டுபிடித்து வான்பாதுகாப்பு ஏவுகணைகளை எச்சரிக்கை செய்து விடும்,

ஆக பாகிஸ்தான் வான் பகுதியை துளைத்து உள்ளே செல்ல இந்த இரண்டு வகையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க வேண்டும், சுமாராக 100 இலக்குகள் கொண்ட அமைப்புகள், இவை அனைத்தையும் அழித்தால் தான் நமது விமானங்கள் உள்ளே செல்ல இயலும், இவற்றை தாக்கி அழிக்க சுமார் 40 போர் விமானங்கள் தேவை, ஒவ்வொன்றும் பாப்பாய் அல்லது KH 31 ஏவுகணைகளுடன் செல்ல வேண்டும்.

அதற்கு சுமார் 12 மிராஜ் விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரு பாப்பாய் ஏவுகணைகள், கூடவே சுமார் 12 சுகோய் விமானங்கள் ஒவ்வொன்றும் ஆறு 6 KH 31 ராடார் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் சென்று முதலில் அவர்களின் வான் பாதுகாப்பு அரணை உடைக்க வேண்டும், அவை இந்த வேலையை சிர்சா மற்றும் ஹல்வாரா விமான தளத்திலிருந்து சென்று செய்யலாம். வான் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்ட பின்னரே தாக்கும் படை மற்றும் அதற்கு பாதுகாப்புக்கு செல்லும் விமானங்கள் புறப்படும்,

வான்பாதுகாப்பு அரண் உடைந்தும் பாகிஸ்தான் தனது அதி நவீன F16 Blk 52 விமானங்களை ஏவும், பாகிஸ்தானின் ஜாகோபாத்திலுள்ள ஷாபாஸ் விமான தளம் மற்றும் ஷோர்கோட்-இல் உள்ள ரபீக்கி விமான தளங்கள் சுமார் 24 விமானங்களை ஏவும், இதில் F16 மற்றும் JF 17 விமானங்கள் அடங்கும்.

 

பிளாக் 52 விமானங்களின் ராடார்கள் அதீத திறன் கொண்டவை இவை சுமார் 300 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடி அவை 100 கிலோமீட்டர் அருகில் வரும்போது AMRAAM ( AIM 120-5)  ஏவுகணைகளை வீசும், கூடவே தெற்கு பகுதியிலிருந்து வரும் JF 17 விமானங்களின் ராடார்கள் 150 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடி அவை 80 கிலோமீட்டர் அருகே வரும்போது PL 12 ஏவுகணைகளை வீசும்,

ஆக வான் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டதும், தாக்கும் விமானங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் சுகோய் விமானங்கள் இவற்றை எதிர்கொண்டு தாக்கி அழிக்க வேண்டும், இந்திய சுகோய் விமானங்கள் மேம்பட்டதாக இருந்தாலும் BVR (Beyond Visual Range) யுத்தத்தில் பாகிஸ்தானின் F 16 விமானங்கள் கடும் எதிர்ப்பை காட்டும்,

சுகோய் விமானங்களின் ராடார்கள் 400 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடும் அதே நேரம் 200 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள இலக்குகளை சரியாக குறிவைக்கும்

அதனால் சுகோய் விமானங்கள் பாகிஸ்தானின் F 16 மற்றும் JF 17 விமானங்களை முதலில் கண்டுபிடித்து தனது R 77 மற்றும் R27 ER ஏவுகணைகளை வீசும், இவை சுமார் 80-100 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள வான் இலக்குகளை சரியாக தாக்கும்.

முதலில் கூறியது போல 12 சுகோய் விமானங்கள் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து செல்லும் போது பாக்கிஸ்தான் கண்டிப்பாக குழம்பி விடும், அதோடு பாதுகாப்புக்காக செல்லும் சுகோய் விமானங்கள் ஒவ்வொன்றும் சுமார் 11 ஏவுகணைகளை சுமந்து செல்லும், சுகோய் விமானம் தான் பாகிஸ்தானின் F 16 மற்றும் JF17 விமானங்களை முதலில் குறி வைத்து தாக்கும், மட்டுமல்லாது ஒரு இலக்கின் மீது 3 அல்லது நான்கு ஏவுகணைகளை வீசும்,

இதனால் வான் சண்டையில் பாகிஸ்தான் கடும் இழப்பையே சந்திக்கும்,

இவ்விரு நிகழ்வும் நடந்தால் தான் பகவல்பூரில் உள்ள தீவிரவாத தளத்தில் ஜாகுவார் விமானங்கள் சுமார் 5000 கிலோ குண்டுகளை வீசி தாக்கி அழிக்கும்.

இந்த ஒரு இலக்கை தாக்க மட்டுமே இந்தியாவுக்கு 24- சுகோய் விமானங்கள், 12 ஜாகுவார் விமானங்கள், 12 மிராஜ் விமானங்கள், 4 மிக் 29 விமானங்கள் ஆக மொத்தம் 52 போர் விமானங்கள் தேவை.

பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று,