இந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்

ராணுவத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்சாஸ் துப்பாக்கிகளை நீக்கி விட்டு அதி நவீன SIG மற்றும் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வாங்க முடிவெடுத்து அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கி ஒரு சில முன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுட்டுள்ளது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MCIWS மற்றும் JVC  துப்பாக்கிகள் தரமற்றதாகவும், ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்யாததாலும் ராணுவத்தின் மொத்த வீரர்களுக்கும் வெளிநாட்டு துப்பாக்கிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் சிறப்பாக,  இதுவரை இன்சாஸ் துப்பாக்கிகளில்  5.56x45mm பயன்படுத்தப்பட்டு வந்தது, சிறப்பு படைகள் பயன்படுத்தும் AK துப்பாக்கிகளில் மட்டுமே 7.62x39mm அளவுள்ள பெரிய தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது, தற்போது வாங்கப்படும் SIG  துப்பாக்கிகளில் 7.62×51 mm அளவுள்ள பெரிய துப்பாக்கி குண்டுகளும் ( ஒரு உறையில் 20 குண்டுகள் ), AK  103 துப்பாக்கிகளில் 7.62x 39 mm அளவுள்ள பெரிய துப்பாக்கி குண்டுகளும் ( ஒரு உறையில் 30 குண்டுகள் ) இருக்கும், பெரிய தோட்டாக்கள் எனில் அதிக அளவு எதிரிக்கு சேதம் விளைவிக்க முடியும்.

AK 103  துப்பாக்கிகள் ராணுவத்தின் முன்னணி படை வீரர்கள் அதாவது இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு முதலில் வழங்கப்படும், ராணுவத்தின் கட்டக் மற்றும் ராணுவத்தின் உள் அமைப்பில் உள்ள சிறப்பு படைகளுக்கு SIG 716 துப்பாக்கிகள் வழங்கப்படும். சீன எல்லையோரம் நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்துக்கும் அதே SIG 716 துப்பாக்கிகள் கிடைக்கும்,

ஆனால் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தோ திபெத் காவல் படை வீரர்கள் இன்னும் சில காலம் இன்சாஸ் துப்பாக்கிகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த SIG Sauer நிறுவனத்துடன்  இந்திய பாதுகாப்பு நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி SIG Sauer நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தான பெப்ரவரி 12 தேதி முதல் அடுத்த 12 மாத காலத்துக்குள் சுமார் 72,400 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வழங்கும், ஆனால் ஒப்பந்த தொகை துப்பாக்கி தோட்டாக்கள் கொள்முதல் மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் பற்றி இந்திய அரசோ SIG Sauer நிறுவனமோ தகவல்கள் வெளியிடவில்லை.

ரஷ்யாவை சேர்ந்த கலாஷ்னிகோவ் நிறுவனமும் இந்தியாவின் அரசு அமைப்பான OFB – யும் இந்தியாவில் புதிய துப்பாக்கி தொழிற்சாலை அமைத்து, கலாஷ்னிகோவ்

AK 103

துப்பாக்கிகளின் நவீன வடிவமான AK 103 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவெடுத்து அதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் கையெழுத்தாகும் என்று பாதுகாப்பு அமைச்சக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 7,50,000 துப்பாக்கிகள் முதல் கட்டமாக இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. ஒப்பந்த தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

மேற்கண்ட இரு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கரக்கால்

CAR 816

நிறுவனத்தின் CAR 816 கார்பைன் துப்பாக்கிகள் சுமார் 94,000 வாங்கவுள்ளது, இந்த ஒப்பந்தமும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது, இந்த கொள்முதலும்  ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.

ஏற்கனவே கடந்த மாதம் இந்திய ராணுவத்துக்கு நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் வாங்கப்பட்டது, குறைந்த அளவில் வாங்கப்பட்டாலும் தற்போதைய காலத்திற்கு ஈடு செய்யும்படியாக உள்ளது.

ராணுவத்தில் இலகு ரக மெஷின் கன் தேவைப்பாடு அதிகம் உள்ளது, இதுவரை மிக கனமாக இன்சாஸ் இலகுரக மெஷின் கன் பயன்படுத்தப்பட்டது, அவற்றையும் நீக்கி விட்டு புதிய மெஷின் கன் வாங்கும் திட்டத்தையும் அரசு விரைவுபடுத்தினால் ராணுவம் புதுப்பொலிவு பெறும்