சிரியாவின் ரசாயன ஆயுத தொழிற்சாலையை தாக்கிய பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை

சிரியாவின் தோமா நகரில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பொது மக்கள் மீது சிரிய அரசுப்படை ரசாயன கலவையை வீசி சுமார் 200-கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றது, இதில் குழந்தைகள் மற்றும் பெண்களே அதிகம், அதோடு இந்த ரசாயன தாக்குதலால் சுமார் 500  பேர் பாதுக்கப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இது குறித்து பொதுவான விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச ரசாயன ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பும் (OPCW)  மற்ற உறுப்பு நாடுகளும் ஐநாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தன, ஆனால் சிரியாவில் அப்படி ஒரு ரசாயன தாக்குதலும் நடக்கவில்லை என்று தீர்மானத்தை வீட்டோ செய்தது ரஷ்யா.

இதனால் கோபமுற்ற அமெரிக்க பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்து நாடுகள் சிரியாவை தாக்குவோம் என்று அறிக்கை விட்டது. நேச நாடுகள் தாக்குதல் நடத்தினால் ரஷ்யா அவர்களை திருப்பி தாக்கும் என்றும் சிரியாவோடு சேர்ந்து அறிக்கை விட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு விமானங்கள் தொடர்ச்சியாக உளவு தகவல்களை சேகரித்து வந்தன. இதற்கு போட்டியாக ரஷ்யாவும் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளை பொருத்திய போர் விமானங்களோடு சிரிய கடற் பகுதியில் ரோந்து சென்றது. இதனால் சிரியாவை நேச நாடுகள் தாக்கினால் ரஷ்யா நேச நாடுகளை தாக்கும் என்ற அச்சம் அப்பிராந்தியத்தில் பரவியது. அதற்கு வலு சேர்க்கும் வகையில், ரஷ்யாவும் அறிக்கை வெளியிட்டது, அவ்வறிக்கையில் சிரியாவின் பாதுகாப்பு தற்போது ரஷ்யாவின் கையில் உள்ளதால் சிரியாவை யார் தாக்கினாலும் ரஷ்யா அவர்களை தாக்கும் என்று கூறியது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிரியாவை நேச நாடுகள் கூட்டாக தாக்கியது. முக்கிய இலக்குகளாக

1. டமாஸ்கஸ் பகுதியில் இயங்கி வரும் ரசாயன ஆராய்ச்சி கூடம்
2. ஹோம்ஸ் நகரில் இயங்கிவரும் ரசாயன ஆயுத தொழிற்சாலை
3. ஹோம்ஸ் நகரில் இயங்கிவரும் ராணுவ கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆயுத கிடங்கு

தேர்வு செய்யப்பட்டு கூட்டுப்படைகளால் கடுமையாக தாக்கப்பட்டது, இந்த முக்கிய இலக்குகளோடு ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் சிரிய தலைமை அலுவலகம் மற்றும் சில சிரிய ராணுவ நிலைகளும் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா சார்பில் தோமஹாக் ஏவுகணைகளும் B1-B குண்டு வீசும் விமானங்களும், இங்கிலாந்து சார்பில் ஸ்ட்ரோம் ஷாடோ ஏவுகணைகள் டொர்னாடோ போர் விமானங்கள் மற்றும் பிரான்ஸ் சார்பில் ரபேல் போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு கனடா ஆதரவு அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது, மேலும் தாக்குதலுக்கு இலக்குகளை தேர்ந்தெடுக்கும் உதவிகளை இஸ்ரேல் வழங்கியதாக ஆரம்பகட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலை இடை மறிக்கவோ அல்லது திருப்பி தாக்கவோ ரஷ்யா எந்த முயற்சியும் எடுக்கவில்லை, ஆனால் சிரிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த தாக்குதலை இடை மறிக்க முயன்றன, ஆனாலும் அது சிறிய அளவில் கூட பயனளிக்கவில்லை.

இந்த தாக்குதல் குறித்து ரஷ்யாவிடம் முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதோடு சிரியாவில் இருக்கும் ரஷ்ய தளங்களையும் அமெரிக்கா தாக்கவில்லை, ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் அதோடு அது சம்பந்தமான பகுதியைகளையும் மட்டுமே தாக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தாக்குதல் நடந்த பின்பு கருத்து கூறியுள்ள ரஷ்யா, இந்த தாக்குதலுக்கு நேச நாடுகள் கடும் விலை கொடுக்க வேண்டிவரும் என்று கூறியுள்ளது, சிரியாவை பொறுத்தவரை வழக்கம் போல எல்லா ஏவுகணைகளையும் இடை மறித்து தாக்கி அழித்துவிட்டதாக கூறியுள்ளது. அதிகாலை வெளியாகியுள்ள புகைப்படங்கள் மேற்கூறிய இலக்குகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதகவும் அதோடு தற்போதும் தீ மற்றும் புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது.

ரசாயன ஆயுதங்களை போரில் பயன்படுத்தினால் சர்வதேச சமுதாயம் பார்த்துக்கொண்டு இருக்காது என்பது இந்த தாக்குதல் மூலம் தெளிவாகிறது, மீண்டும் ஒரு முறை ரஷ்யா வெறும் ஒரு வாய் சவிடால் என்பதும் தெளிவாகிறது.