சிரியாவை தாக்க தயாராகிறதா பிரெஞ்சு அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை

சிரியாவின் கவுத்தா நகரை பேராளிகளிடமிருந்து கைப்பற்ற கடும் போரில் ஈடுபட்ட சிரியா இரான் ரஷ்யா மற்றும் ஹெஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, கவுத்தா நகரை ஏறத்தாழ முழுவதுமாக கைப்பற்றியது, கவுத்தாவில் இருந்த போராளிகள் குழு அடிப்படையில் நகரை மூன்றாக பிரித்து போரிட்டது. இதில் பல மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் ரஷ்யாவின் உதவியுடன் அவற்றை மூடி மறைத்தது. கவுத்தா நகரை முழுவதும் இதுவரை சிரிய கூட்டுப்படை கைப்பற்றவில்லை, தோமா என்ற பகுதியில் தற்போதும் கடும் யுத்தம் நடந்து வருகிறது.

தோமா பகுதியில் போராளி குழுக்கள் பல சுரங்கங்கள் மற்றும் பாதாள அறைகள் அமைத்து அங்கிருந்து சிரிய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதோடு அங்குள்ள பாதாள அறைகளில் தான் பல பொதுமக்களும் குழந்தைகளும் வசித்து வந்தார்கள்.

இதனால் தோமா பகுதியில் சிரிய ராணுவம் பெரும் பின்னடைவையே சந்தித்தது. பொதுவாக சுரங்கங்கள் மற்றும் பாதாள அறைகளை கைப்பற்றுவது மிக கடினம், அதோடு அதை கைப்பற்ற வேண்டுமானால் அதிக விலையும் கொடுக்க வேண்டிவரும்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தோமா பகுதியில் அதிக அளவு சாரின் மற்றும் க்ளோரின் கலந்த நச்சுவாயு கலவையை சிரிய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வீசின. இவை சுரங்கங்களுக்குள்ளும் பாதாள அறைகளுக்குள்ளும் எளிதாக ஊடுருவி பலத்த சேதத்தை உண்டு பண்ணியது, முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் சுமார் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக சிரியாவில் மருத்துவமனைகள் நடத்திவரும் அமைப்புகள் கூறியது. அடுத்த சில நாட்களிலேயே இதன் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது.

அதோடு நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டு வாய் மற்றும் காது வழியாக நுரை தள்ளி இறந்துபோன பல குழந்தைகளின் படங்களும் வெளியானது. இது நச்சுவாயு மற்றும் வேதி ஆயுதங்களால் தோமா பகுதி தாக்கப்பட்டுள்ளது புலப்பட்டுள்ளது.

இது பல்வேறு உலக நாடுகள், மனித உரிமைகள்ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் மருத்துவ அமைப்புகளை கோபம் கொள்ள செய்துள்ளது. போரில் தொடர்ச்சியாக ரசாயன மற்றும் நச்சு வாயுக்களை வெளியிடும் ஆயுதங்களை பயன்படுத்தும் சிரியா மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் ரஷ்யா மற்றும் இரான் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

இது குறித்து உடனடியாக விசாரிக்க வேதி மற்றும் உயிரி ரசாயன கட்டுப்பாடு அமைப்பு ஐநாவில் தீர்மானம் ஒன்றை அதன் மறு நாளே கொண்டுவந்தது, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி தீர்மானத்தை வீட்டோ செய்தது ரஷ்யா.

இதனால் அதிக கோபம் கொண்டுள்ள உறுப்பு நாடுகள் மற்றும் அமெரிக்கா சிரியா மீது ஒரு பெரிய தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக இது குறித்து பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றது. மேலும் தாக்குதலை விரைந்து நடத்தவும் அவை திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் சிரிய வான் வெளி பகுதி மிகுந்த ஆபத்தான பகுதி என்றும் அங்கு கப்பல்களோ விமானங்களோ செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வருவதால், ரஷ்யாவும் தனது படைகளை அதிக உஷார் நிலையில் வைத்துள்ளது, மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளுடன் ரஷ்ய போர் விமானங்கள் ரோந்து செல்கிறது, ரஷ்ய வான் கட்டுப்பாட்டு பறக்கும் ராடார் விமானங்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ரோந்தில் உள்ளது.

இதனிடையே அதிபர் ட்ரம்ப் இரு நாட்களுக்கு முன்பு கூறுகையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்கப்பும் என்று கூறியுள்ளதால் போர் பதற்றம் இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

குறிப்பிட தகுந்த தகவல்கள் அடிப்படையில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல் படைகள் மத்திய தரைக்கடல் பகுதியில் போருக்கு ஆயத்தமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதோடு சிரியா வான்பரப்பில் GPS வழிகாட்டும் அமைப்புகளையும் ரஷ்யா தொடர்ந்து செயலிழக்க வைத்துள்ளது.

போர் பதற்றத்தை குறைக்க சிரியாவுக்குள் வேதி மற்றும் உயிரி ரசாயன கட்டுப்பாடு அமைப்பு அதிகாரிகள் வரலாம் என்றும், ரசாயன தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்யலாம் என்று சிரியா கூறியுள்ளது.அதோடு ஒரு சில அமைப்புகளும் தோமா பகுதியில் ஆய்வு நடத்தலாம் என்று ரஷ்யா கூறியுள்ளது, ஆனால் பொதுவான ஒரு விசாரணை குழுவை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை நேற்று மறுபடியும் ஐநாவில் வீட்டோ செய்தது ரஷ்யா

இருந்தாலும் தற்போதைய தகவல்கள் அடிப்படையில் சிரியா மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தவே அமெரிக்க கூட்டுப்படைகள் தயாராகி வருகின்றன, கடந்த வருடம் ஏப்ரல் மாதமும் இது போல ஒரு ரசாயன தாக்குதலை சிரியா பொது மக்கள் மீது நடத்தியது, இதனால் கோபமுற்ற அமெரிக்கா சிரியாவின் ஒரு பெரிய விமான தளம் மீது சுமார் 59 ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தது, பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வித ரசாயன தாக்குதல்களையும் நடத்தவில்லை

பின்பு நவம்பர் மாதம் மீண்டும் ரசாயன தாக்குதல்களை நடந்த துவங்கியது, இருந்தாலும் அதன் தாக்கமும் பொது மக்கள் இறப்பு எண்ணிக்கையும் குறைவு என்பதால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை, தற்போது நடந்த தாக்குதலில் 200-கும் மேற்பட்டோர் இறந்துள்ளதால் உலகநாடுகள் அதை கவனித்து தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றன.

 

இறந்தவர்களின் புகைப்படங்கள் மிக பயங்கரமாக இருப்பதால் அவற்றை இங்கு பகிர முடியவில்லை, கீழே கெட்டி புகைப்பட தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு,

 

Embed from Getty Images