நிற்பாய் ஏவுகணை

நிற்பாய் ஒரு மிக தாழ்வாக ஒலியை விட சிறிது வேகம் குறைந்த அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணை ஆகும், இதில் பொருத்தப்பட்டுள்ள வழிகாட்டும் அமைப்பு மற்றும் கணினி, ஏவுகணையை சிறப்பாக வழி நடத்தவும், மிக துல்லியமாக தாக்கவும் பயன்படும்,

இதன் முதல் சோதனை முயற்சி 2013 ம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது, ஆனால் அதன் வழிகாட்டும் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஏவுகணையை நடுவானிலேயே வெடிக்க வைத்து விட்டனர்,

இருப்பினும் இந்த சோதனையில் பல்வேறு கட்ட அம்சங்கள் சோதனை செய்யப் பட்டதாகவும், ஏவுகணைப் பற்றிய ஒரு முழு அடிப்படை தகவல்களை பெற முடிந்ததாகவும் சோதனை அதிகாரிகள் தெரிவித்தனர்,

எனவே நிற்பாய் ஏவுகணையை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்க முடிவெடுத்தது பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆராய்ச்சி அமைப்பு, 2014 அக்டோபர் மாதம் மீண்டும் ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது,

ஒரிசாவின் அருகே உள்ள சந்திபூர் ஏவுகணை சோதனை செய்யும் பகுதியிலிருந்து ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது, இந்த சோதனையில் ஏற்கனவே குறிக்கப்பட்ட அனைத்து சாராம்சங்களும் வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது, மேலும் அதன் வழிகாட்டும் அமைப்பு ஏவுகணையை மிக தாழ்வாகவும் இடைப்பட்ட உயரத்திலும் பறக்க வைத்து ஏற்கனவே குறிக்கப்பட்ட வழித்தடத்தில் மிக சரியாக பறக்க வைத்தது,

சுமார் 60 நிமிடம் 1000 க்கும் மேல் கிலோமீட்டர் தூரம் பறந்து இலக்கை சரியாக தாக்கியது, இந்த ஏவுகணையை இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் இதன் கூடவே பறந்து இதன் அம்சங்களை வீடியோவாக எடுத்து அதிகாரிகளுக்கு வழங்கியது,

இந்த ஏவுகணை சுமார் 500 முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதமோ அல்லது மற்ற வெடி பொருளையோ சுமந்து சென்று சுமார் 1500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியது, இதன் தற்போதைய சோதனை நிலத்திலிருந்து மட்டும் தான், ஆனால் வரும் காலங்களில் விமானத்திலிருந்தும் நீர்மூல்கியிலிருந்தும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,

இது போன்ற தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உலகின் சில நாடுகளிடம் மட்டும் தான் உள்ளது,