தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் அமெரிக்கா பயணம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார், அங்கு அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் , அமெரிக்கா உள்துறை செயலர் மைக்கேல் பாம்போ மற்றும் CIA -வின் இயக்குனர் ஹாஸ்பெல்-ஐயும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையில், முக்கியமாக மாலத்தீவு, டோக்லாம் மட்டும் ஸ்ரீலங்கா பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது, அதோடு ஜப்பான்-அமெரிக்கா-இந்தியா குறித்த உறவை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.

அது மட்டுமல்லாது அமெரிக்காவுடன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் அடிப்படை ராணுவ ஒப்பந்தத்தையும் நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இவ்விரு ஒப்பந்தங்களும் கையெழுத்தானால் தான், அமெரிக்காவிடமிருந்து அதி நவீன உளவு விமானங்களை இந்தியாவால் வாங்க முடியும்.

அது மட்டுமல்லாமல் கப்பற்படை தளபதியும் நாளை மறுநாள் அமெரிக்காவில் அங்குள்ள கப்பற்படை அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளார், விஷால் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டம் மற்றும் கப்பல்படைக்கு உளவு விமானங்கள் வாங்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

அதோடு அடுத்த மாதம் இந்தியாவின் வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மிக குறுகிய காலத்தில், இரு நாடுகளுக்குமிடையே பெரிய அளவு சந்திப்புகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா இன்னும் இரு மாதங்களில் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார், அப்போது கிடப்பில் உள்ள 5-ம் தலைமுறை போர் விமான திட்டம் மற்றும் S400 வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்கும் திட்டம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது, ஆனாலும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவோ அல்லது ஒப்பந்தம் கையெழுத்தாகவோ வாய்ப்புகள் இல்லை.

மேலும் ரஷ்யா செல்வதற்கு முன்பு அமெரிக்கா செல்லும் பாதுகாப்பு அமைச்சர் அங்கு செல்லும் போது முடிவுகளை மாற்றவும் வாய்ப்புகள் உள்ளது.

இருந்தாலும் இது குறித்த அணைத்து செய்திகளும் முடிவுகளும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத துவக்கத்திலோ தான் வெளியாகும், சரியான யூகங்களும் இதுவரை வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது,