இந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை

அமெரிக்காவின் பசுபிக் ராணுவத்தின் கமாண்டராக இருப்பவர் அட்மிரல் ஹாரிஸ், சமீபத்தில் அமெரிக்கா ராணுவ தலைமையகத்தில் நடந்த கூட்டத்தின் போது இந்தியாவுக்கு F 35  விமானங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினார். F 35 விமான கொள்முதல் குறித்து பல யூகங்கள் வெளியாகியுள்ள இந்த நேரத்தில் கமாண்டர் ஒருவர் நேரடியாக கூறியுள்ளது யூகங்களை நிரூபிப்பதாக உள்ளது.

இந்திய பாதுகாப்பு படை தற்போது அதிக அளவிலான மிக நவீன அமெரிக்கா ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது, குறிப்பாக P 8I உளவு விமானம் மற்றும் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ராணுவத்தின் பயன்பாட்டுக்காக நவீன அப்பாச்சி தாக்கும் ஹெலிகாப்டர், கன ரக போக்குவரத்துக்கு ஹெலிகாப்டர் சினூக் ஆகியவற்றை அடுத்த ஆண்டுகளில் படைகளில் இணைக்க உள்ளது.

மேலும் சுமார் $8 பில்லியன் டாலர் அளவிலான கப்பல் படைக்கு போர் விமானம் வாங்கும் திட்டத்திற்கு போயிங் நிறுவனத்தின் F 18 E/F சூப்பர் ஹார்னட் விமானம் முன்னணியில் உள்ளது, அதோடு சீ கார்டியன் ஆளில்லா உளவு விமான கொள்முதல், கப்பல் படைக்கான நீர்மூழ்கி அழிக்கும் ஹெலிகாப்டர் கொள்முதல் போன்ற திட்டங்கள் இறுதி நிலையில் உள்ளது, மேலும் சுமார் 12 P 8I உளவு விமானங்களை அடுத்த சில ஆண்டுகளில் வாங்கவும் இந்திய கப்பல் படை திட்டமிட்டுள்ளது.

கப்பல் படையில் இந்திய அதிக அளவு அமெரிக்க தயாரிப்பு விமானங்களை பயன்படுத்தி வருகிறது, அவை போரின் போது மற்ற அமெரிக்க விமானங்களோடு எளிதில் தொடர்பு கொள்ளவும் ஒருவொருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் வழி செய்யும். அதோடு அமெரிக்க இந்திய துறைமுக பயன்பாட்டு ஒப்பந்தமும் குறிப்பிட தகுந்த ஒரு ஒப்பந்தம் என்றும் அட்மிரல் ஹாரிஸ் அந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்திய விமானப்படையும் ஏற்கனவே அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது, இந்திய விமானப்படைக்கு அமெரிக்கா ஏற்கனவே கொத்து குண்டுகள் மற்றும் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை விற்றுள்ளது. ஆனால் அப்பாச்சி தாக்கும் ஹெலிகாப்டர் தான் முதல் முழு தாக்கும் ஆயுதம் ஆகும். போர் பயிற்சிகளின் போது அமெரிக்க விமானப்படையுடன் இந்திய விமானப்படைகள் ஏற்கனவே சேர்ந்து செயல்பட்டுள்ளது,

P8I  விமானம் இந்திய படையில் இணையும் போது, இந்திய விமானப்படையின் திறனும் அதோடு மற்ற விமானங்களுடன் இணைந்து பணியாற்றும் திறனும் கூடவே தோழமை நாட்டு விமானங்களுடனும் இணைந்து செயலாற்றும்.

அடுத்த மாதம் இந்திய மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தனித்தனியே சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது F 35 விமான கொள்முதல் பற்றி ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் இந்திய கப்பல் படையின் தேவை அதிகம் உள்ளது என்றும் அட்மிரல் ஹாரிஸ் தெரிவித்தார்.