குரங்கணி காட்டுத்தீ

இந்தியாவில் காட்டுத்தீ என்பது அசாதாரணம், அது மட்டுமல்ல எப்போதாவது ஒரு முறை தான் ஏற்படும், இழப்புகளும் மிக குறைவே.

பாதுகாப்பு படைகள் உள்நாட்டில் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதி முறை. அரசுகள் கேட்காவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சகம் தானாக முன்வந்து மீட்பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் ராணுவ மரபு.

குரங்கணி காட்டுத்தீயில், மாட்டிக்கொண்ட 36 பேரில் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார், 9 பேர் இறந்துள்ளனர், இது மிகவும் வருந்தத்தக்க இழப்பே.

ராணுவம் மற்றும் விமானப்படை சார்பில் பாதுகாப்பு அமைச்சக ஆணை கிடைக்கப்பெற்றதும் படைகள் களத்தில் இறங்கிவிட்டன. இரவில் காட்டுத்தீயை அணைப்பது என்பது மிக கடினம். காரணம்

ஹெலிகாப்டர் மூலம் தண்ணி மற்றும் வேதி பொருட்களை தீ மீது ஊற்றினால் தீயின் தாக்கம் அடங்கும், அதுவும் தீ அதிகமாக இருக்குமிடத்தில் இதை செய்தால் பலனளிக்காது.

அதனால் வெளிச்சம் வரும் வரை காத்திருந்து பின்பு தீ குறைவான இடங்களை கண்டறிந்து அங்கிருந்து அணைக்க முயற்சிப்பார்கள். தீ அணைக்கும் முறைகள், பரவுவதை தடுக்க பல்வேறு முறைகள் உள்ளது, ஓர் தீ அணைப்பு வீரரால் தான் அதை சரியாக விளக்க முடியும்.

இரவு நேரத்தில் நமது விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறக்கும் மேலும் மீட்பு வேலைகளையும் செய்யும், இந்த இரவில் பார்க்கும் கருவிகள் அனைத்தும் வெப்ப உணர் கருவிகளை கொண்டே செயல்படும், அதனால் அதிக வெப்பம் மற்றும் தீ வெளிவரும் இடங்களில் இவற்றால் எதுவும் செய்ய இயலாது. அதோடு சிந்தடிக் ராடார்களாலும் கடும் வெப்ப நிலையில் எதுவும் செய்ய இயலாது.

வெளி நாடுகளிடம், பெரிய தீயணைப்பு விமானங்கள் உண்டு, இவை எந்த பெரும் கடினமான தீயையும் எந்த கடும் சூழ்நிலையும் எதிர்கொண்டு இரவு பகல் என்று தொடர்ந்து தண்ணீர் மற்றும் வேதி பொருட்களை வீசி தீயை கட்டுக்குள் கொண்டு வரும்.

ஓகி புயலின் போது US 2i விமானங்கள் இருந்திருந்தால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்னும் எளிதாக இருந்திருக்கும் ..புயலில் பாடம் படித்த பின்பும் அது போன்ற விமானங்களை அரசு வாங்கவில்லை. அரிதாக ஏற்படும் காட்டு தீயை அணைக்கவா விமானங்களை வாங்கப்போகிறது.

ராணுவமும் விமானப்படையும் தங்களால் இயன்ற அளவு இருக்கும் உபகரணங்களுடன் 27 பேரை உயிருடன் மீட்டுள்ளது, 9 பேரின் இழப்புக்கு வருத்தமும் தெரிவிக்கிறது.