கவச வாகனத்தை குறிவைத்து தாக்கிய நக்சல்கள்

சதீஸ்கரின் சுக்மா பகுதியில் சுமார் 12 வீரர்களுடன் சென்று கொண்டிருந்த கவச வாகனம் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததில் கவச வாகனம் தூக்கி எறியப்பட்டது.

இதில் பயணித்த 9 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் மற்றவர்களின் நிலையும் மிக மோசமாக உள்ளது. அவர்களை குணமாக்க மருத்துவர்கள் முயன்று வருகின்றனர்.

இதில் கவச வாகனத்தை குறை சொல்ல முடியாது, வீரர்களையும் குறை சொல்ல முடியாது.

1. யுகிராத் என்ற பெயரில் OFB தயாரித்து வரும் கவச வாகனங்களை தான் CRPF அதிகம் பயன்படுத்துகிறது. சுமார் 11 டன் எடையுள்ள இந்த கவச வாகனத்தில் 12 பேர் பயணிக்கலாம் ஓட்டுனருடன் சேர்த்து, இந்த கவச வாகனம் 7.62×51 mm குண்டுகளிலிருந்து உள்ளே இருக்கும் வீரர்களை காக்கும், ஆனால் அதை விட அதிக திறனுள்ள .50 BMG குண்டுகள் மூலம் சுட்டால் கண்டிப்பாக கடினமான ஆர்மரை துளைத்து உல் இருப்பவரை கொன்று விடும்.

அது மட்டுமல்லாது சுமார் 42 கிலோ வரை சக்தியுள்ள TNT வெடித்தாலும் உள்ளே இருப்பவருக்கு எதுவும் ஆகாது. ஆனால் அதற்கு மேலே சென்றால் அவ்வளவு தான். கவச வாகனத்தை சுக்கு நூறாக்கிவிடும்.

தற்போது நடந்த இந்த கண்ணி வெடி தாக்குதலில் குறைந்த பட்சம் 80 கிலோ அளவு வெடி பொருட்களை நக்சல்கள் பயன்படுத்தி மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கலாம். வாகனம் அந்த இடத்தில வந்ததும் வெடிக்க செய்து பெரிய அளவு இழப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

உலகில் எந்த ராணுவத்திடமும் இந்த அளவு சக்தி வாய்ந்த குண்டுகளிலிருந்து பாதுகாக்கும் மிக கனமான கவச வாகனங்கள் இல்லை, ஏன் டாங்கிகள் கூட இவ்வளவு சக்தி மிக்க வெடி விபத்திலிருந்து தப்பாது.

2. கவச வாகனம் செல்லுமுன் அங்கு உளவு தகவல்கள் சேகரித்திருக்கலாம் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். அந்த பகுதிகள் ஆள் நடமாட்டமில்லாத காட்டு பகுதிகள், புதிதாக யார் வந்தாலும் ஆள் நடமாட்டம் தென்பட்டாலும் அங்கு ஏற்கனவே இருப்பவர்களுக்கும் நக்ஸல்களுக்கும் தெரிந்துவிடும். அதனால் உளவு தகவல் சேகரிப்பதும் இயலாத காரியம்.

தீர்வுகள்

கண்ணி வெடியை கண்டறியும் வாகனங்களை முன்னே அனுப்பி அதன் பின்னால் மற்ற கவச வானங்களை போக செய்யலாம். CRPF-இடமோ இந்திய ராணுவத்திடமோ அது போல ஒரு வாகனங்கள் கூட இல்லை.

Mine Plougher என்ற டாங்கிகளை பயன்படுத்த இயலாது, இவை சாலைகளை சேதப்படுத்தி பெரிய அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைத்து விடும்.

வீரர்கள் போகவும் வரவும் ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுக்கலாம்.

வேறு எந்த வழிகளும் இல்லை