கடும் போருக்கு தயாராகி வரும் சிரியாவின் கவுத்தா நகரம்

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கவுத்தா நகரை கைப்பற்ற சிரிய அரசு கடந்த வாரம் தாக்குதலை தொடங்கியது, சிரிய ராணுவத்தின் மிக சிறந்த டைகர் படை அதோடு அதிகமான பீரங்கிகள் ஆர்டில்லரிகள் கூடவே ரஷ்யாவின் சிறப்பு படையும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது, சுமார் 15,000 பேர் கொண்ட இந்த படையை அதே அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் படை எதிர் கொள்ள தயாராகி வருகிறது .

கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்பு அரணை உடைக்க முடியாமல் சிரிய அரச படைகளும் ரஷ்ய சிறப்பு படைகளும் திணறியது, முதல் கட்ட தரை தாக்குதலில் சிரிய ரஷ்ய படைகளால் சிறிதளவு கூட முன்னேற முடியாததால் வேறு வழியின்றி கொடூரமான வான் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது சிரியா

இந்த வான் தாக்குதலுக்கு சிரியாவின் MiG 27 தரை தாக்கும் விமானங்கள் ரஷ்யாவின் சுகோய் Su 27 விமானங்களும் பயன்படுத்தப்பட்டன, இவை அதிக உயரங்களிலிருந்து 125 கிலோ முதல் 1500 கிலோ வரை உள்ள குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்களின் முதல் பாதுகாப்பு அரணை உடைத்தனர், அதோடு ஏவுகணைகளும் அந்த பகுதியில் வீசப்பட்டது.

Embed from Getty
Images

இந்த விமான தாக்குதலின் போது நகரின் எல்லை அருகே உள்ள கட்டிடங்கள் பல கடும் சேதத்திற்கு உள்ளானது, இதனால் அங்கு வசித்த பல மக்கள் உயிரிழந்தார். இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பரவியது , அதோடு யுத்தத்தை நிறுத்துமாறும் சிரிய மற்றும் ரஷ்ய படைகள் நிர்பந்திக்கப்பட்டன.

அதோடு ஐக்கிய நாடுகள் அவையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், அமெரிக்காவும் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தமும் நிறைவேறியது, ஆனாலும் வான் தாக்குதலை ரஷ்யாவும் சிரியாவுக்கு நிறுத்தவில்லை, தொடர்ந்து குண்டு வீசி முதல் பாதுகாப்பு அரணை உடைத்து தரைப்படைகள் நகருக்குள் செல்ல உதவி வருகிறது.

ஆனாலும் ஐக்கிய நாடுகளின் பார்வையாளர்கள் மற்றும் சிரியாவின் வெள்ளை ஹெல்மட் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தினமும் 5 மணி நேரம் மட்டும் நகரின் உள்ளே உள்ள மக்களுக்கு மருத்துவ மற்றும் உணவு அளிக்க உதவி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் இதன் ஸ்திரத்தனமை குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

கிளர்ச்சியாளர்கள் கவுத்தா நகருக்கு வெளியே உள்ள சாலையை துண்டித்து சுமார் 40 அடி நீள பள்ளத்தை உருவாக்கி சிரிய அரசு படைகள் உள்ளே வராமல் தாக்கி வந்தன. தற்போது வான் தாக்குதல் மூலம் அங்கு இருந்த கிளர்ச்சியாளர்கள் அழிக்கப்பட்டதால், அந்த பள்ளத்தின் வழியாக அரச படைகள் முன்னேறி வருகிறது. நகரின் வாயிலுக்கு அருகே வரும்போது அவர்களை எதிர்கொள்ள கிளர்ச்சியாளர்களின் எல்லா பிரிவுமே தயாராகி வருகிறது, உயிரைக்கொடுத்தாவது கவுத்தா நகரை காப்போம் என்று கிளர்ச்சியாளர்களும், நகரை கைப்பற்ற என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம் என்று அரசும் கொக்கரித்து வருகிறது.

படை பலம் – சிரிய அரசபடை

அரச படையில் இந்த தாக்குதலுக்கு சுமார் 15,000 சிரிய வீரர்கள், அதோடு ரஷ்ய சிறப்பு படை வீரர்கள், முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர்கள், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியாக டாங்கிகள் மற்றும் ஆர்டிலாரிகளும் உள்ளது, இவை தரை மூலம் அரச படை முன்னேற வழி செய்யும்.

இந்த மாபெரும் படைக்கு உதவியாக ரஷ்ய விமானப்படை டமாஸ்கஸ் விமானதளத்தில் சுகோய் Su 25, MiG 27 தரை தாக்கும் விமானங்கள், ( இவை 125 கிலோ முதல் 500 கிலோ வரை உள்ள குண்டுகளை வீசும்) அதோடு சுகோய் Su 27 ரக விமானங்களும் உள்ளது, இந்த சுகோய் Su 27 விமானம் 250 முதல் 1500 கிலோ வரை உள்ள குண்டுகளை வீசி எந்த தரை இலக்குகளையும் தவிடுபொடியாக்கும். இந்த விமானங்களே கவுத்தா நகரின் முதல்கட்ட போரின் போது பெரிய அளவிலான குண்டுகளை வீசி அதிக அளவில் பொது மக்களையும் கிளர்ச்சியாளர்களையும் கொன்றது.

மேலும் டமாஸ்க்ஸ் விமானதளத்தில் இரானிய விமானப்படையும் தற்போது முகாமிட்டுள்ளதாக செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது பல மேற்கத்திய ஊடகங்கள், இதனால் கவுத்தா தாக்குதலுக்கு இரானிய விமானப்படையும் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகிறது.

படை பலம் – கிளர்ச்சியாளர்கள்

சவூதி அரேபியாவின் உதவியுடன் செயல்படும் ஆர்மி ஆப் இஸ்லாம் ( Army of Islam ) சுமார் 10,000 வீரர்கள் டாங்கிகள் ஆர்டில்லரி என்று அதிக பலத்துடன் உள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெனீவாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இதன் பிரதிநிதி அம்மார் தல்வான் கூறுகையில் கவுத்தா நகரை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டோம் என்றும், சிரிய படைகள் தாக்கினால் கடும் பதிலடி கொடுப்போம் என்றும் கூறினார்.

துருக்கி மற்றும் கத்தார் நாட்டின் உதவியுடன் செயல்படும் மற்றொரு அமைப்பு பயிலாக் அல் ரஹ்மான் ( Failaq Al Rahman ) , இந்த கிளர்ச்சி படை பிரிவில் சுமார் 8000 வீரர்கள் உள்ளனர், இவர்களிடமும் டாங்கிகள் ஆர்டில்லரிகள் மோர்ட்டார்கள் என்று பல ஆயுதங்கள் உள்ளது. இந்த படைகளுக்கு தலைவராக சிரிய ராணுவத்தின் முன்னாள் கேப்டன் அப்துல் நசீர் உள்ளார்.

இவர்களோடு சேர்ந்து அரர் அல் ஷாம் படைகளும் களத்தில் உள்ளது, இந்த படைகள் தான் அலெப்போ மற்றும் ஐடிலிப் நகரில் சிரிய படைகளுடன் ஏற்கனவே போரிட்டவை. இவர்களுடன் கூடவே மேலும் பல கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் உள்ளன.

அதோடு சண்டை நடக்கும் இந்த நகரில் சுமார் 4 லட்சம் பொது மக்களும் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கின்றனர், அதோடு இங்கு வசிக்கும் பலர் அரச கட்டுப்பாடில் உள்ள நகரங்களிலிருந்து தப்பி வந்து இங்கு வசிப்பவர்களே.

போர் நிறுத்தத்துக்கு வழியே இல்லை என்று சிரியா கூறியுள்ளதால், நடக்க போகும் பெரும் பேரழிவை யாராலும் தடுக்க இயலாது.

முன்பு அலெப்போ , ஹோம்ஸ் மற்றும் ஐடிலிப் நகரில் நடந்த சண்டைகளில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நகரங்களை விட்டு வெளியேறி தான் கவுத்தா நகரில் தஞ்சம் அடைந்தனர், ஆகவே இங்கிருந்து வெளியே செல்ல அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. இல்லை என்றால் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கீழே போட்டு அரசு முன்பு மண்டியிடவேண்டும், அதற்கு கிளர்ச்சியாளர்கள் தயாராக இல்லை.

வெறும் தரை தாக்குதல் என்றால் சிரிய படைகளை கிளர்ச்சி படைகள் தாக்கி வெற்றி கொள்ளும், இதனால் பொது மக்களுக்கும் அதிக அளவு இழப்பு வராது,

ஆனால் தரை தாக்குதலோடு கடுமையான வான் தாக்குதல் நடத்தினால் மட்டுமே சிரிய படைகளால் வெற்றி கொள்ள முடியும், ஆனால் வான் தாக்குதல் நடத்தும் போது பொதுமக்களுக்கு கடும் சேதம் உண்டாகும், அதுவும் நகரின் மையத்தில் போர் நடக்கும் போது இது மிக மோசமாகும்,

தற்போது வெளிவந்துள்ள புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில் இனி வரப்போகும் சண்டை மிக கடினமாக இருக்கும். ஏற்கனவே 5 லட்சம் மக்களை கொன்று ஆட்சி பீடத்தை தக்க வைத்துள்ள அசாத் மேலும் சில லட்சம் மக்களை கொல்வது ஒன்றும் ஆச்சர்யம் அளிக்காது. Embed from Getty Images

ஐக்கிய நாடுகள் அவையில் விமான தாக்குதலுக்கு தடை விதிக்க தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா வீட்டோ செய்து விடும், இதுவரை சிரியாவுக்கு எதிராக வந்த சுமார் 20 தீர்மானங்களை வீட்டோ செய்துள்ளது ரஷ்யா, இனி வரப்போகும் தீர்மானங்களையும் வீட்டோ செய்து மேலும் சில லட்சம் மக்களை கொல்ல சிரியாவுக்கு உறுதுணையாக நிற்கும்

ரஷ்யா களத்தில் உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன, இருந்தாலும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், சிரியாவுக்கு எதிராக நேச நாடுகள் தாக்கினால் இங்கிலாந்தும் கலந்து கொள்ளும் என்றார். அதோடு பிரான்ஸ் தெரிவிக்கையில் ரசாயன குண்டுகளை கொண்டு தாக்கப்படுவது உறுதியானால் பிரான்ஸ் விமானப்படை சிரியாவை தாக்கும் என்றும் கூறியுள்ளது.

கவுத்தா போர் உச்ச நிலையில் இருப்பதால், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து நகரான அப்ரினை கைப்பற்ற குர்து மக்களுடன் கடும் போரில் ஈடுபட்டுள்ளது துருக்கி, போரை நிறுத்த ஆம்னெஸ்டி அமைப்பு இரு சாராருடனும் பேசி வருகிறது, அதோடு குர்து மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.