பிரான்ஸ் அமெரிக்கா இந்திய கப்பல் படைகள், இந்திய பெருங்கடலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், சீன கப்பல் படையின் நடவடிக்கைகளை தீவிரவாமாக கண்காணிக்கவும் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா துறைமுக மற்றும் கண்காணிப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, அந்த ஒப்பந்தத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும், இந்திய பெருங்கடலில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இந்தியாவுடன் சேர்ந்து துறைமுக பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தகவல் பரிமாற்றம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளது பிரான்ஸ். அடுத்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள பிரெஞ்சு அதிபர் மெக்ரான் இந்திய பிரதமரோடு இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய மற்றும் ஆப்ரிக்காவில் முன்பு பல காலணிகளை வைத்திருந்த பிரான்ஸ், தற்போது அந்த பகுதிகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஒரு சில முக்கிய பகுதிகளை மட்டும் இன்னும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்த இடங்களில் ராணுவ மற்றும் விமான தளங்களுடன், இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் அல்லது நேச நாட்டு படைகளுக்கோ அல்லது உடைமைகளுக்கோ எந்த வித ஆபத்து வந்தாலும் உடனடியாக உதவ தயார் நிலையிலும் உள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்கு, டிஜிபியுட்டி நாட்டிலும், ரீயூனியன் தீவிலும், மோசஸாம்பிக் நாட்டிலும் அதோடு இயக்கிய அரபு எமிரேட்டிலும் ராணுவ தளங்கள் உள்ளது, இந்த ராணுவ தளங்கள் மூலம் மொத்த அரபிக்கடலையும், இந்திய பெருங்கடலின்  மேற்கு பகுதிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனால் சமீபகாலமாக, சீனா தொடர்ந்து அப்பகுதிகளில் காலூன்றி வருகிறது, குறிப்பாக பாகிஸ்தானின் கவடார் துறைமுகம், டிஜிபியுட்டியில் கப்பல் மற்றும் விமான தளம், இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் என்று குறுகிய காலத்தில் இந்திய பெருங்கடலில் வேரூன்றி விட்டது. அது மட்டுமல்லாது அப்பகுதிகளில் தொடர்ந்து நீர்மூழ்கிகளையும், போர்கப்பல்களையும் அனுப்பி ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

சீனாவுக்கு எதிராக இந்தியாவும் பல ராணுவ ஒப்பந்தங்களை இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் செய்துள்ளது, குறிப்பாக இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்களை கண்காணிக்க மொரீசியஸ், செசெல்ஸ் மற்றும் மாலத்தீவில் ராடார்களை நிறுவி உள்ளது, அதோடு ஓமான் நாட்டின் டுகும் துறைமுகத்தை ராணுவ தளமாக்க அனுமதியும் பெற்றுள்ளது.  அது மட்டுமல்லாது, இந்திய பெருங்கடலில் உள்ள எல்லா அமெரிக்கா தளங்களை பயன்படுத்தவும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் நெடுந்தொலைவில் உள்ள அமெரிக்காவின் ரகசிய ராணுவ தலமான டியாகோ கார்சியாவிலும்  உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்தவும்  அனுமதி பெற்று அதை பயன்படுத்தியும் வருகிறது.

சமீபத்தில் செசெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றில் இந்தியா கப்பல் படை மற்றும் விமான தளம் அமைக்க அனுமதி பெற்றிருந்தது. பிரான்ஸ் நாடும் அதே போன்ற அனுமதியை செசல்ஸ் நாட்டிடமிருந்து வாங்கியுள்ளது. இரு நாடுகளும் அங்கு பெரிய ஒரு ராணுவ தளம் அமைக்க திட்டம் தீட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கப்பல் படை ஆப்ரிக்காவின் தென் கோடி முதல் மலாக்கா சந்தி வரை தற்போது ரோந்து சென்று வருகிறது, அதோடு சீன கப்பலைகளை கண்காணிக்கவும் அந்த தகவல்களை அதை அதே நேரத்தில் அமெரிக்க கப்பல்படையுடன் பகிரவும் செய்கிறது.  அமெரிக்காவின் பல போர்களில் பிரான்ஸ் நாடும் ஒன்று சேர்ந்து போரிட்டுள்ளது, அதோடு அமெரிக்காவுடன் பல ராணுவ ஒப்பந்தங்களையும் செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் பிரான்ஸ் நாடும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவுடன் துறைமுக ஒப்பந்தத்தை செய்துகொள்வதன் மூலம் இந்தியாவின் துறைமுகங்களை பிரான்ஸ் நாடு பயன்படுத்தி கொள்ளும், இதன் மூலம் இந்திய பெருங்கடலில் இழந்த தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட முயற்சி செய்யும். மாற்றாக இந்திய பெருங்கடலில் உள்ள தனது தளங்களை இந்திய கப்பல் படை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும்.  இதன் மூலம் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை வெகுவாக குறைக்க முடியும்.

சீனா தனது 60% எண்ணெய் இறக்குமதியை அரபு நாடுகளிடமிருந்து தான் பெறுகிறது. அவை அனைத்துமே கப்பல் வழியாக அரபிக்கடல் – இந்திய பெருங்கடல் – மலாக்கா சந்தி வழியாக தான் சீனாவுக்கு செல்கிறது.  தற்போது உலகின் மாபெரும் அச்சுறுத்தலாக வலம் வரும் சீனாவை அடக்க அவர்களில் கடல்வழி ஏற்றுமதி இறக்குமதிக்கு கடிவாளம் போட்டாலே சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும். சீனாவுடன் போர் என்று வந்தால் அமெரிக்கா இந்திய கூட்டுப்படைகள் இந்திய பெருங்கடலையும் அரபிக்கடலையும் தனது கட்டுக்குள் கொண்டு வரும். தற்போது இதனுடன் பிரான்ஸ் நாடும் சேர முன்வந்துள்ளது.

சீனா கொஞ்சம் அறிவாக இதற்கு மாற்றாக இப்போதே சீனா பாகிஸ்தான் வழியாக சாலைகளை அமைத்துள்ளது. இதன் மூலம் கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தினால் சாலை வழியாக அரபிக்கடலை எட்டிவிடும், அங்கிருந்து ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும்.

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க பிரான்ஸ் நாடு ஜெர்மனியுடன் சேர்ந்து புதிய திட்டங்களை யோசித்து வருவதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் ராணுவ புரட்சிக்கு எதிராக இந்தியா படைகளை அனுப்பலாம் என்று செய்திகள் வெளியாகிய நேரத்தில், இந்தியா மாலத்தீவின் உள்விவகாரத்தில் தலையிட்டு படைகளை அனுப்பினால் சீனா வேடிக்கை பார்க்காது என்று குறிப்பிட்டு இருந்தது.

இது சீனாவின் ராணுவ பலத்தை வெகுவாகவே பறை சாற்றியதாக இருந்தது.  இது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் இனி வரும் காலங்களில் சீனாவால் வரும் என்பதால் இந்திய அமெரிக்க பிரென்ச் ஒப்பந்தம் முக்கியமானது என்று பிரான்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..