MiG 29K விமானங்களை கடினப்படுத்த கப்பல் படை முடிவு

இந்திய கப்பல்படையின் விமானம்தாங்கி கப்பலான விக்ரமாதியா கப்பலிலிருந்து செலுத்தப்படும் MiG 29K விமானங்களை கடினப்படுத்த கப்பல் படை முடிவு செய்துள்ளது, தற்போதைய நிலையில் MiG 29K விமானங்களை கப்பலிலிருந்து பயன்படுத்துவது மிக கடினம் என்றும், அதோடு தொடர் பழுதுகளும், விமானத்தின் பகுதி பொருட்களும் தொடர்ச்சியாக செயல்படாமல் இருப்பதால், விமானத்தை தொடர்ச்சியாக கப்பலிலிருந்து செலுத்த முடியாத நிலை உள்ளதாக கப்பல் படை தெரிவித்துள்ளது.

கப்பலில் விமானத்தை இறக்கும் போது, விமானத்தின் முக்கிய பாகங்கள் செயலிழந்து போவதாகவும், ஒவ்வொரு முறையும் கப்பலில் விமானத்தை தரை இறக்கிய பின்னர் பல மணி நேரம் அதை சரி செய்ய வேண்டியுள்ளதாகவும் கப்பற்படை தெரிவித்துள்ளது.

2004, மற்றும் 2010-இல் ரஷ்யாவுடன் செய்துகொண்ட MiG 29K விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் எவ்வித பராமரிப்பு குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை, அதோடு உதவிக்கான ஒப்பந்தத்தையும் செய்யாததே காரணம் என்றும், தற்போதைய நிலையில் எல்லா பிரச்சனைகளுக்கும் ரஷ்யாவின் உதவியையே நாட வேண்டியுள்ளது, ரஷ்யா தனது முன்னணி தொழில்நுட்ப குழுவை அனுப்பியும் அவர்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்றும்  கப்பல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமாதித்தியா கப்பலிலிருந்து Su 33 போர் விமானத்தை ஏவ முடியாது, அதனால் அளவில் சிறிய MiG 29 விமானங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு, விமானப்படையின் MiG 29 விமானத்தில் மாறுதல் செய்து விக்ரமாத்தியா கப்பலில் சேர்க்கப்பட்டது, இந்த வேலைகளுக்கு இந்திய கப்பல் படை சுமார் 14,000 கோடி வரை செலவு செய்தது, பதிலாக ரஷ்யா 45 MiG 29K போர் விமானங்களை இந்திய கப்பல் படைக்கு கொடுத்தது, ஆனால் எவ்வித உதவியோ அல்லது பராமரிப்பு ஒப்பந்தங்களோ கையெழுத்தாகவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கப்பல் படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ், MiG 29K  கப்பல் படை மாதிரி உருவாக்கத்திற்கு இந்தியா தான் முழு பண உதவி செய்தது என்றும், விமானத்தில் பிரச்னை என்றால் அதை ரஷ்யா தான் தீர்க்க வேண்டும் என்றும், ரஷ்யாவுக்கு தொழில் தர்மம் இருந்தால் அவர்கள் இந்த பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இதை அவர்கள் இலவசமாக செய்து தர வேண்டும் என்றும் கூறினார்.

இந்திய பாதுகாப்புத்துறையின் அதிகாரி ஒருவர் கூறும் போது, HAL நிறுவனம் தங்களால் இயன்ற அளவு பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வதாகவும், ஆனால் விமானத்தை செய்த நிறுவனத்தின் ஒப்புதலும் உதவியும் இல்லாமல் எவ்வித மாறுதலையும் இந்த விமானத்தில் செய்வது மிக கடினம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய கப்பல் படை, ரஷ்யா மற்றும் HAL கூட்டாக ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்து கப்பல் படையின் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும், இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கப்பல் படையின் MiG 29K விமானத்தின் நம்பகத்தன்மை குறித்து தணிக்கை துறையும் பல முறை அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2010 பிப்ரவரி முதல் படையில் சேர்க்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 40 எஞ்சின்களை குப்பையில் போட்டுள்ளது கப்பல் படை, முக்கிய காரணமாக வடிவமைப்பு தொடர்பான குறைபாடுகள் என்று கப்பல் படை தெரிவித்துள்ளது.