தொடரும் ஆயுத பற்றாக்குறை, தீர்வு என்ன

பாதுகாப்பு துறை பற்றி தணிக்கை செய்த இந்திய தலைமை தணிக்கை துறை பெரும் எச்சரிக்கையை நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது, கடந்த 2015-இல் வெளியான அறிக்கையில் மொத்த பாதுகாப்பு படையையும் சாடிய தணிக்கை அறிக்கை, தற்போதைய அறிக்கையில் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மட்டுமே கடுமையாக சாட்டியுள்ளது, மற்ற படைகளை குறித்து விமர்சனங்கள் வைத்தாலும் அவை அந்த அளவு சீரியஸ் இல்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்,

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த ஆயுத தொழிற்சாலைக்கு நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, இங்கிருந்து தான் ராணுவத்துக்கு தேவையான அனைத்து வித ஆயுதங்கள், வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுகிறது,  அரசு நிறுவனம் என்பதாலோ என்னவோ, அதன் தரத்திலும் தயாரிக்கும் திறனிலும் மிகப்பெரும் பின்னடைவு உள்ளது, இதற்கு ஆயுத தொழிற்சாலை மட்டும் காரணம் அல்ல, ராணுவ அதிகாரிகளும், அமைச்சகமும் தான்.

2013-இல் என்ன நிலை இருந்ததோ அதே நிலை தான் கடந்த ஆண்டு இறுதி வரை தொடர்கிறது.  இந்த பிரச்சனையை இன்றைக்கு தீர்த்தால் கூட, நிலைமை ஓரளவு சீராக இரண்டு ஆண்டுகளாவது பிடிக்கும்.

முக்கிய பிரச்சனையாக CAG முன்வைத்திருப்பது ஆர்டில்லரிகளுக்கு பியுஸ் இல்லை, டாங்கிகளுக்கு குண்டு இல்லை என்பதே, ஒரு ஆர்டில்லரி குண்டு சுட வேண்டுமானால், அதன் தலைப்பகுதியில் பியூஸ் அமைப்பும் அடிப்பகுதியில் Charge-ம் வேண்டும், இம்மூன்றும் சேர்ந்தால் தான் ஒரு குண்டை சுட முடியும்.

இதில் ஒரு நல்ல காரியமாக, போதிய அளவு அல்லது தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆர்டில்லரி குண்டுகள் உள்ளன அதோடு சார்ஜும் இருக்கிறது, CAG  கொடுத்த அறிக்கையில் ராணுவத்திடம் சுமார் 8 மில்லியன் அளவு ஆர்டில்லரி குண்டுகள் உள்ளன.  ஆனால் அதை சுட தேவையான பியூஸ் வெறும் 9 லட்சமே உள்ளது என்று கூறியுள்ளது.

2012-இல் ராணுவம் சுமார் 9000 கோடி ருபாய் அளவுக்கு ஆர்டில்லரி பியூஸ் வாங்க டெண்டர் வெளியிட்டது, ராணுவம் அப்போது மெக்கானிக்கல் பியூஸ் பயன்படுத்தி வந்தது, ஆனால் அடுத்து வரும் காலங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மின்னணு பியூஸ் வாங்க அந்த 9000 கோடி ருபாய் டெண்டரை வெளியிட்டது.

அந்த நேரத்தில் OFB-இடம் அதை தயாரிக்கும் வழிமுறைகள் உபகரணங்கள் மற்றும் தொழிலார்கள் இல்லாதால், அதை தனியாருக்கு கொடுக்க அரசு திட்டமிட்டது, முதல் கட்டமாக சுமார் ஒரு லட்சம் பியூஸ்களை 800 கோடிக்கு வாங்க முடிவு செய்தது,  Delay_Fuze

அப்போது அரசுடன் மல்லு கட்டிய ECIL, ( ECIL  ஆக்கபூர்வ அணுஆக்க துறையின் கீழ் உள்ள பிரிவு ) தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்காமல் தானே எடுத்துக்கொண்டது, அதுவும்  தென்னாபிரிக்காவின் டெனில் நிறுவனத்திடமிருந்து உதிரி பாகங்களை வாங்கி அதை இங்கு உள்ள ஒரு ஆலையில் வைத்து பொருத்தி ராணுவத்துக்கு வழங்கியது,

அதை பரிசோதித்த ராணுவம் உண்மையை கண்டுபிடித்ததோடு, அதன் தரம் மிக கேவலமாக இருப்பதையும் கூறியது, அதனால் அதிகப்படியான அடுத்த கொள்முதலுக்கு ராணுவம் அனுமதி வழங்கவில்லை.

இதே நேரம் OFB தனது ஆலையில் மெக்கானிக்கல் பியுஸ் தயாரித்த ஆட்களை வேறு வேலைகள் ஈடுபடுத்தியிருந்தது, பியூஸ் செய்யும் கருவிகளும் துருபிடிக்க துவங்கியது.

இதற்கிடையே 2013-இல் வெளியிட்ட டெண்டருக்கு எவ்வித பதிலும் இல்லாததால்,வேறு வழியில்லாமல் OFB-இடம் மீண்டும் பழைய மெக்கானிக்கல் பியூஸ்களை தயாரிக்க கேட்டது, அப்போதைய நிலையில் OFB-யால் அது முடியாத காரியம்.

அதே நேரத்தில் அந்த டெண்டரை ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தால் உறுதியான தரமான பியூஸ் ராணுவத்துக்கு கிடைத்திருக்கும், அன்று ஹைதராபாத்தை சேர்ந்த HBL நிறுவனம் கடுமையாக போட்டியிட்டு டெண்டரை பிடிக்க முயற்சித்தது, அதற்கு முட்டுக்கட்டை போட்டது ஒரு சில ராணுவ அதிகாரிகள், OFB அதிகாரிகள் மற்றும் அரசின் ஒரு சில அமைச்சர்கள்.

அன்றிலிருந்து இத்தருணம் வரை அந்த டெண்டர் இன்னும் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது, ஆனால் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை, தனியார் நிறுவனங்களுக்கு இதை கொடுக்க வேண்டும் என்று அதிக சத்தங்கள் எழவே அது அப்படியே அடங்கி கிடக்கிறது.

இதே நிலை தான் டாங்கிகளுக்கு தேவையான HE மற்றும் AFSPDS குண்டுகள்,  இந்த இரண்டு டெண்டரையும் தனியாருக்கு கொடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும், இல்லை என்றால் இதே நிலை தான் தொடர்ந்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

  மொத்தத்தில் குற்றம் உள்ளது, முடிவு எடுக்ககாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்வு செய்யும் ராணுவ அதிகாரிகள், அதற்கு உடந்தையாக இருக்கும் மற்றவர்கள், தனியார் நிறுவனங்களை அனுமதிக்காத OFB அதிகாரிகளுமே,

OFB தயாரிக்கும் அதே ஆயுதங்களை மற்ற தனியார் நிறுவனங்களும் தயாரித்து இரண்டையும் பரிசோதித்து தரமானதை ராணுவம் தேர்வு செய்தால் மட்டுமே இந்த ஆயுத பற்றாக்குறை தீரும், இல்லை இன்னும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே செவி சாய்த்துக்கொண்டிருந்தால் இந்த நிலை இன்னும் மோசாமாகவும் செய்யும் என்பதும் காணக்கூடிய உண்மையே.