OFB தயாரித்த துப்பாக்கியை நிராகரித்தது ராணுவம்

 ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள INSAS மற்றும் AK ரக துப்பாக்கிகளை மாற்றிவிட்டு நவீன புதிய தலைமுறை துப்பாக்கிகளை வாங்க ராணுவம் திட்டமிட்டு அதற்கான வேளைகளில் ஈடுபட்டுள்ளது, துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு நிறுவனமான OFB-யிடம் பணியை கொடுத்தத. இந்த புதிய துப்பாக்கி பழைய துப்பாக்கிகள் போல அல்லாது பெரிய அளவுள்ள குண்டுகளை சுடும் வகையில் இருக்க வேண்டும் என்று ராணுவம் முடிவெடுத்திருந்தது.

அதன் படி, சாதாரண 5.56x45mm குண்டுகளை சுடும் INSAS துப்பாக்கிகள், 7.62x39mm குண்டுகளை சுடும் AK ரக துப்பாக்கிகளையும் மாற்றி விட்டு, அதை விட பெரிய அளவுள்ள 7.62×51 mm குண்டுகளை சுடும் துப்பாக்கிகளை வாங்க முடிவெடுத்துள்ளது ராணுவம்.

2c5846d0b8ea4583ebb6485e04dbc9c61349928224_fullதிடீரென உலகின் முன்னணி ராணுவங்கள் பலதும் இந்த நிலைக்கு தான் மாறியுள்ளது, அமெரிக்காவும், பிரான்சும் கூட புதிய இந்த வகை துப்பாக்கிகளை தான் வாங்கவுள்ளது, இந்தியா போல அல்லாது அவை துரித முடிவெடுத்து HK 416/7 துப்பாக்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளன, இருந்தாலும் பெரிய காலிபர் அதாவது 7.62×51-ஆ இல்லை 7.62×39-ஆ என்று உறுதியாக தெரியவில்லை.

HK 417

OFB தாயரித்த ராணுவம் சொன்ன அளவுள்ள துப்பாக்கியை பரிசோதித்த ராணுவ சோதனைக்குழு அதில் பல குறைகள் இருப்பதாகவும், அதை களைந்துவிட்டு மீண்டும் வருமாறும் கூறியுள்ளது, ராணுவம் கூறுகையில் படை வீரர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த உறுதியுடைய துப்பாக்கி தான் தேவைப்படுவதால் தரத்தில் எவ்வித குறையும் வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருப்பதாகவும் தேவைப்பட்டால் வெளிநாட்டு துப்பாக்கியை வாங்கவும் தயார் என்றும் கூறியுள்ளது.

OFB தயாரித்த துப்பாக்கியில் முக்கிய குறையாக சிலவற்றை கூறியுள்ளது ராணுவம், அவை

  1. சுடும் போது அதிக ரீகாயில் ( அதாவது சுடும் போது அதிகப்படியாக துப்பாக்கி பின்னே திருப்பி அடித்தல் )
  2. அதிக அளவு தீ மற்றும் வெப்பம் வெளிப்படுதல்
  3. அதிகப்படியான சத்தம்  இது மூன்றும் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது,

அதோடு கூட சில பரிந்துரைகளையும் ராணுவம் கூறியுள்ளது அவை

  1. துப்பாக்கியின் குண்டுகளை தாங்கி வைக்கும் மகஸின்-ஐ மறுவடிவாக்கவும் செய்யவும்
  2. துப்பாக்கியின் பாதுகாப்பு விசையை மாற்றி வடிவமைக்கவும்
  3. சுடும் போது அதிக முறை துப்பாக்கி பழுதாவதால் அதிலும் கவனம் செலுத்த ராணுவம் கூறியுள்ளது.

இவை அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டு மீண்டும் சோதனைக்கு வர OFB- யிடம் கேட்டுக்கொண்டுள்ளது ராணுவம்.  இதனிடையே வெளிநாட்டு துப்பாக்கிகளான HK 417 மற்றும் FN SCAR H துப்பாக்கியையும் ராணுவம் வரும் நாட்களில் சோதனை செய்யவுள்ளது. வெற்றி பெறும் துப்பாக்கி மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும், இதற்கு எப்படியும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

WhatsApp Image 2017-06-21 at 9.33.25 PM
                               OFB தயாரித்த சோதனையில் தோல்வியுற்ற துப்பாக்கியின் மாதிரி