டாங்கிகளை தகர்க்கும் கண்ணிவெடிகள் உற்பத்தி ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தம்

புல்கான் நகரில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கில் கடந்த வருடம் ஏற்பட்ட விபத்துக்கு காரணமான டாங்கிகளை அழிக்கும் அதிக சக்தியுள்ள கண்ணிவெடிகளை தயாரிக்கும் பணியை அரசின் கீழ் உள்ள ஆயுத தயாரிப்பு முகமை (OFB) முழுவதுமாக நிறுத்தியுள்ளது, கண்ணி வெடியின் அமைப்பில் உள்ள தவறால் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதால் அதன் அமைப்பையே மாற்றவேண்டிய வேண்டியுள்ளது, அதோடு அந்த வேலைகள் இதுவரை முழுமை பெறாமல் உள்ளதால் கடந்த ஒரு வருடமாக ராணுவத்துக்கும் புதிய கண்ணி வெடிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஆயுதங்களை வடிவமைக்கும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான  ARDE  உருவாக்கிய இந்த கண்ணி வெடியை ஆயுத தயாரிப்பு முகமையான OFB இதுவரை தயாரித்து வந்தது. கடந்த வருடம் ராணுவ ஆயுத கிடங்கில் வைத்திருந்த ஒரு கண்ணி வெடியில் உள்ள TNT வெடி பொருள் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் சேதமும் அதோடு ஏராளமான ராணுவ வெடி பொருட்களும் அழிந்து போனது.

விபத்து ஏற்படுவதற்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பே இது போன்ற கசிவு இருப்பதாக ராணுவத்தின் வெடிபொருள் கிடங்கின் தலைமை OFB-க்கு தகவல் அனுப்பியதோடு, அதை அதிகம் இருப்பு வைக்கவேண்டாம் என்றும் ஆயுத கிடங்குகளின் கமாண்டர்களுக்கு அறிவுறுத்தியது, அப்போதே இதில் உள்ள கோளாறை சுட்டி காட்டிய போதும், அது குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது கண்ணிவெடிகளை தயாரித்த OFB-யும் அதை  உருவாக்கிய ARDE-யும்.

வெடிவிபத்து குறித்து விசாரித்த ராணுவம், வெடிபொருள் கிடங்கின் கட்டுப்பாடு அமைப்பின் கமாண்டர் இந்த வகை கண்ணி வெடிகளை உடனடியாக OFB-யிடம் திருப்பி கொடுத்து அதை அழிக்க உத்தரவிட்டும், அதை அழிக்காமல் பழுது பார்த்து மீண்டும் ராணுவ கிடங்குக்கே அனுப்பியுள்ளது OFB

மேலும் ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்குமுன் அதன் தகுதியை ஆராயும் DGQO-வுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ராணுவ விசாரணைக்குழு.

OFB இந்த கண்ணி வெடிகளின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாலும், பழைய இருப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டதாலும் ராணுவத்திடம் போதிய அளவு டாங்கிகளை அழிக்கும் கண்ணிவெடிகள் இல்லாமல் உள்ளது, மேலும் கண்ணிவெடியில் பயன்படுத்தப்படும் TNT வெடிபொருளின்  திறனையும் மேம்படுத்த ARDE-விடம் பரிந்துரை செய்துள்ளது ராணுவம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், ராணுவத்திடம் பல்வேறு வகையான டாங்கிகளை அழிக்கும் கண்ணிவெடிகள் உள்ளன, அதில் ஒரு மாதிரியில் தான் தேக்க நிலை உள்ளது என்றும், இதனால் ராணுவத்தின் தாக்கும் திறனில் அதிகம் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.

பொதுவாக பார்த்தால், ஆயுத கிடங்குகளில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் தரம் குறைவான வெடி பொருட்களால்தான் ஏற்படுகிறது, அதோடு OFB-யின் தயாரிப்பின் தரம் குறித்து ராணுவம் பல முறை விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது