அதி நவீன உளவு செயற்கைக்கோளை அடுத்தமாதம் ஏவுகிறது இஸ்ரோ

Carto Sat என்ற பெயருடைய அதி நவீன உளவு செயற்கைக் கோளை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது, தரையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் உயர வான் வெளியில் வலம் வர உள்ள இந்த செயற்கைக் கோள் தரை இலக்குகளை துல்லியமாக படமெடுக்கும், இதன் மூலம் அண்டை நாடுகளின் ராணுவ போக்குவரவு பற்றி  துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

உலகின் சில நாடுகளே இது போன்ற நவீன செயற்கைக் கோளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவும் ஏற்கனவே இது போன்ற உளவு செயற்கைக் கோளை பயன்படுத்தி வருகிறது, ஆனாலும் தற்போது ஏவப்படும் செயற்கைக் கோள், மிக துல்லியமாக படமெடுக்கும், அதே நேரத்தில் அதி வேகமாக தகவல்களையும்  கட்டுப்பாட்டு அமைப்பிற்கு அனுப்பும்.

Carto Sat வரிசயில் இது மூன்றாவது செயற்கைக் கோள் ஆகும், ஏற்கனவே ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள் தற்போது பயன்பாட்டில் உள்ளது, இன்னும் இரண்டை வரும் காலங்களில் அனுப்பவுள்ளது  இஸ்ரோ . இந்த செயற்கைக் கோள் எதிரிகளின் ஏவுகணைகள், டாங்கிகள் போன்றவற்றை கூட மிக துல்லியமாக படமெடுக்கவல்லது , எல்லையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை இந்த செயற்கைக் கோள் தான் படமெடுத்து ராணுவத்திற்கு கொடுத்து வருகிறது.

சுமார் 700 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக் கோளில், அதி நவீன படமெடுக்கும் ராடர்கள் கமெராக்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் உள்ளது, இந்த உளவு செயற்கைக் கோள் ராணுவ தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் எதிரிகளின் நிலை குறித்து ராணுவத்தால் துல்லியமாக கணிக்க முடியும்.

கார்கில் போரில் இது போன்ற செயற்கைக் கோள் தேவைப்பட்டது, இந்தியாவிடம் இது போன்ற செயற்கைக் கோள் அப்போது இல்லை, இஸ்ரேல் நாட்டிடமிருந்து செயற்கைக் கோளை வாடகைக்கு வாங்கி பயன்படுத்தியது. ஆனால் தற்போது இதில் முழுமையான தன்னிறைவு பெற்று வருகிறது.

மே மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்த செயற்கைக்கோளுடன், சுமார் 21 மற்ற செயற்கைக் கோளை ம் விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.