நான்காவது அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு தயாராகிறது DRDO

அணு ஆயுதங்களோடு கண்டம் தாண்டி தாக்கும் தொலை தூர அக்னி 5 ரக ஏவுகணையை நான்காவது முறையாக சோதனை செய்து பார்க்க DRDO தயாராகி வருகிறது. ஒரிசாவிலுள்ள அப்துல் கலாம் ஏவுகணை சோதனை நிலையத்திலிருந்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யவுள்ளது DRDO. அக்னி 5 ஏவுகணையின் தாக்கும் தூரம் சுமார் 5000 கிலோமீட்டருக்கும் மேல் ஆகும்.

மேலும் இந்த அக்னி சோதனை பாதுகாக்கப் பட்ட ஒரு குப்பி போன்ற வடிவில் உள்ள கலனிலிருந்து சோதனை செய்யப்படும், இதற்காக வடிவமைக்கப்பட்ட தத்ரா லாரியிலிருந்து இந்த ஏவுகணை வானில் ஏவி சோதனை செய்யப்படும்.

இந்த சோதனையின் போது அதன் துல்லியத் தன்மையை சோதிக்க போவதாகவும், மேலும் அதன் பறக்கும் உயரம், திசைவேகம் போன்றவற்றையும் சோதித்து அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தப் போவதாகவும் DRDO தெரிவித்துள்ளது .

அக்னி 5 ஏவுகணை உலகின் நவீன ஏவுகணைகளில் ஒன்று ஆகும், அதன் வழிகாட்டும் அமைப்பு, அதன் ராக்கெட் எஞ்சின், மற்றும் இலக்கை சரியாக குறிவைக்கும் அமைப்பு போன்றவை அக்னி 5 ஏவுகணையை ஒரு தலை சிறந்த ஏவுகணையாக மாற்றியுள்ளது.

மேலும் இதற்கு முந்தய அக்னி ஏவுகணைகளையும் [ அதாவது அக்னி 2,3,4 ], பாதுகாக்கப்பட்ட குப்பி போன்ற அமைப்பு மூலம் ஏவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்னி 5 ஏவுகணை ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்து பார்க்கப் பட்டுள்ளது, கடைசியாக குப்பி போன்ற அமைப்பிலிருந்து தான் ஏவி சோதனை செய்யப்பட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று சோதனைகளுக்கு பின்பு ராணுவ அணு ஆயுத படையில் சேர்க்கப்படும்.

மேலும் அடுத்த கட்டமாக ஒரே ஏவுகணையில் சுமார் 10 குண்டுகளை ஏவும் அமைப்பை சோதனை செய்து பார்க்க போவதாக DRDO தெரிவித்துள்ளது. அதிக பட்ச குண்டுகளை வைத்து ஏவும் போது, எதிரிகளின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கூட இது லாவகமாக கடந்து விடும்.

Agni 5 ஏவுகணை சுமார் 17 மீட்டர் உயரமும், சுமார் 2 மீட்டர் விட்டமும் உடையது. இதனால் சுமார் 1.5 டன் அளவுடைய அணு குண்டை சுமந்து செல்ல முடியும். மொத்த ஏவுகணையும் சுமார் 50 டன் எடை கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 24 மேக் வேகம், அதாவது ஒலியை விட சுமார் 24 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியது.

தனது 5000 கிலோமீட்டர் பயணதூரத்தை சுமார் 15 நிமிடங்களில் இந்த ஏவுகணை எட்டி விடும்