ISIS- க்கு எதிராக புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்கியது அமெரிக்கா

ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போர் புரிய அமெரிக்கா தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பலை பெர்சிய வளைகுடா பகுதியில் நிலை நிறுத்தியிருந்தது. அந்த கப்பலிலிருந்து தான் போர் விமானங்களை ஏவி ISIS தீவிரவாதிகளின் நிலைகளின் மேல் குண்டுகளை வீசியது. கடந்த நவமபர் மாதம் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலை அப்பகுதியிலிருந்து விலக்கி அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்துக் கொண்டது அமெரிக்க கப்பல் படை.  ஆறு மாதத்திற்கு ஒரு தடவை அமெரிக்க போர் கப்பல்கள் பணி முடித்து தாயகம் திரும்புவது வழக்கம்.

அதன் பிறகு சுமார் 20 நாட்களுக்கு மேல் பெர்சிய வளைகுடா பகுதியில் ஒரு சில அமெரிக்க போர்க்கப்பல்கள் தவிர எந்த விமானம் தாங்கி போர் கப்பலும் இல்லை. இருப்பினும் இராக் மற்றும் குவைத் ராணுவ தளங்களிலிருந்து போர் விமானங்களை ஏவி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கடந்த புதனன்று அமெரிக்காவின் மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஹாரி S ட்ருமன், பெர்சிய வளைகுடா பகுதிக்கு அதன் மற்ற போர் கப்பல் படையுடன் வந்து சேர்ந்தது. வந்த சில மணி நேரங்களிலேயே போர் கப்பலிலிருந்து விமானங்களை ஏவி இராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த போர் கப்பல் பெர்சிய வளைகுடா பகுதியில் அடுத்த ஆறு மாதம் வரை தங்கி ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ளும்.

இதனிடையே பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலை அடுத்து பிரான்ஸ் நாடும் தனது விமானம் தாங்கி போர் கப்பலை மத்திய தரைக் கடல் பகுதியில் நிறுத்தி ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டுகளை வீசி வருகிறது. அந்த கப்பல் படை பிரிவில் பிரான்ஸ் நாட்டின் போர் கப்பல்களும் இங்கிலாந்து நாட்டு போர்க்கப்பல்களும் உள்ளது.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல்களின் வரவால் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக போரை உக்கிரப்படுத்த இரு அரசுகளும் முடிவு செய்துள்ளன.

  • http://Google+ Baskaramoorthy Bas

    Our defense systems are highly satisfactory, and progress indeed…