IL 76/78 விமானங்களை நவீனப்படுத்த இந்திய விமானப்படை கோரிக்கை

இந்திய விமானப் படையில் உள்ள போக்குவரத்து மற்றும் வானிலே எரி பொருள் நிரப்பும் விமானங்களை நவீனப்படுத்தி அதன் ஆயுட்காலத்தை சுமார் 15 ஆண்டுகள வரை அதிகரித்து பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது, அதற்காக சுமார் $600 மில்லியன் அளவு நிதியை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது,

ஏற்கனவே இதே போன்ற கோரிக்கையை பலமுறை விமானப்படை முன்வைத்த போதும் அரசு அதை நிராகரித்திருந்தது, இருப்பினும் மறுபடியும் விமானப் படை அரசை அணுகியுள்ளது,

இந்தியா சுமார் 17 IL 76 விமானத்தை போக்குவரத்திற்கும், தளவாடங்கள் எடுத்து செல்லவும், மற்ற 8 IL 78 MKI விமானங்களை போர் விமானங்களுக்கு வானிலேயே எரி பொருள் நிரப்பும் பணிக்காகவும் பயன்படுத்தி வருகிறது, இவை 1985 முதல் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டவை ஆகும்,

எனவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்த, பல மாறுதல்களையும் நவீன கருவிகளையும் சேர்த்து இன்னும் 15 ஆண்டுகள் பயன்படுத்தவே இந்த புதிய நவீனப்படுத்தும் ஒப்பந்தத்தை நடைமுறை படுத்த விமானப்படை கேட்டுக் கொண்டு வருகிறது.

புதிய நவீனப்படுத்துதலில், முக்கியமாக புதிய என்ஜின்களும், விமானி அறையையும் கட்டுப்பாட்டையும் புதிய தொழில் நுட்பத்திற்காக ஏதுவாக மாற்றியமைக்கப்படும்,