AMCA 5-ம் தலை முறை போர் விமானம்

இந்திய விமானப்படைக்கு ராடாரில் புலப்படாத 5-ம் தலை முறை போர் விமானத்தை தயாரிக்க இந்தியாவின் HAL நிறுவனம் வேலைகளை ஆரம்பிக்க தயாராகி விட்டதாக விமானப் படை தளபதி ராஹா தெரிவித்தார், மேலும் இதன் வேலைகள், சோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் 2030 முதல் விமானப் படையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே அது வரைக்கும், நவீனப்படுத்தப்பட்ட MiG 29, மிராஜ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் படையில் இருக்கும் என்றும் அவர் கூறினார், நவீனப் படுத்தப்பட்டுள்ள இந்த விமானங்கள் வரும் காலங்களிலும் சண்டையிட ஏற்றவை என்றும் அவர் கூறினார்,

இந்தியா மூன்று வகையான 5-ம் தலைமுறை ராடரில் புலப்படாத விமானங்களை விமானப் படையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது, ரஷ்யாவின் PAK FA, மற்றும் இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் FGFA மற்றும் முழுவதும் இந்தியாவிலேயே செய்யப்பட்ட AMCA . தற்போது தொடங்கப் பட்டுள்ள இந்த AMCA திட்டம் 2030 இல் தான் நிறைவு பெறும், இந்த திட்டம் இது வரை பேச்சு வடிவில் மட்டுமே உள்ளதாகவும் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் முதல் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே இந்த திட்டம் செயல் முறைக்கு வரும் என்றும் தளபதி தெரிவித்தார்,

நடுத்தர எடையுடன் செய்யப்படும் இந்த விமானம் எதிரிகளின் கண்ணுக்குப் புலப்படாதவாறு செய்யப்படும், இதற்காக நவீன உலோகங்கள் மற்றும் ராடாரை எதிரொளிக்காத பெயிண்ட் இவை பயன்படுத்தப்படும், மேலும் வானிலும் நிலத்திலும் உள்ள இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கவும் தாக்கவும் பயன்படும் அதி நவீன Active ரேடாரும் இதில் பயன்படுத்தப்படும்,

ஏற்கனவே பல நாடுகள் இந்த 5-ம் தலை முறை கட்டுமானத்தில் முன்னணியில் உள்ளன, சீனா இரு வகையான விமானங்களை கட்டி சோதனையும் செய்து கொண்டு வருகிறது, ஜப்பானும் சோதனைக்கு ஆயத்தமாக உள்ளது