கூடுதலாக நான்கு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளை கட்ட இந்தியா முடிவு

ப்ராஜெக்ட் P 75 என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டின் DCNS கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 25,000 கோடி செலவில் ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளை மும்பையில் உள்ள மாகசான் கப்பல் கட்டும் நிறுவனம் கட்டி வருகிறது, மற்ற ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளை விட சற்று மேம்பட்ட வகையில் இந்தியாவில் செய்யப்பட்ட இவற்றில் பல இந்திய தயாரிப்பு கருவிகள் இணைக்கப்படவுள்ளது, மேலும் முதல் நான்கிலும் சாதாரண எஞ்சினும், கடைசி இரண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தால் உருவாகப்பட்ட AIP எனப்படும் மேம்படுத்தப்பட்ட உந்து சக்தி மற்றும் காற்று உருவாக்கும் அமைப்பும் சேர்க்கப்படும்,

இதில் முதல் ஸ்கார்பியன் நீர்மூழ்கி கடுமையான கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,சோதனைகளை முடித்து அடுத்த வருடம் படையில் சேர்த்துக் கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் வரும் 2020- க்குள் படையில் சேர்க்கப்பட்டு விடும்,

இதனிடையே இதன் செயல்பாடுகளை பார்த்து திருப்தியடைந்த இந்திய கப்பல் படை, இதே ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலில் இன்னும் நான்கு கூட கட்ட உத்தேசித்துள்ளது, இந்த நான்கிலும் கடைசி இரண்டில் சேர்க்கப்பட்டது போல இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தால் உருவாகப்பட்ட AIP எனப்படும் மேம்படுத்தப்பட்ட உந்து சக்தி மற்றும் காற்று உருவாக்கும் அமைப்பும் சேர்க்கப்படும்,

இந்தியாவிடம் தற்போது சுமார் 10 மிக பழைய நீர்மூழ்கிகளே உள்ளது, அவற்றை சீக்கிரம் படையிலிருந்து விலக்கிக் கொள்வது அவசியம், அதனாலேயே P 75 என்னும் திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிகள் கட்ட திட்டமிடப்பட்டு, அவை கட்டுமானத்தில் உள்ளன , தற்போது அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, கப்பல் படை அடுத்த P 75 I என்னும் திட்டத்தின் கீழ் மேலும் ஆறு நீர்மூழ்கிகளை கட்ட திட்டமிட்டுள்ளது, அதன் ஒப்பந்தம் வரும் 2018க்கு பிறகு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

  • Guru vallavan

    தகவல்கள் அனைத்தும் நன்று.
    தங்களது புதிய பதிவுகளை உடனே தெரிந்து கொள்ள e-mail subscribe இருந்தால் நன்றாக இருக்கும்.

    • SajeevJino

      நன்றி …. ஈமெயில் Subscribe Option சேர்க்கப்பட்டு விட்டது