பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு

 

இந்தியாவின் பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வேலைகள் ஏறத்தாழ முடிந்து விட்டாதாகவும் சீக்கிரமே பயன்பாட்டிற்கு வரும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சருக்கான அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

ஏவுகணைகளைப் பற்றி கல்லூரி ஒன்றில் பேசும் போது, பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஒரு கனவாக இருந்தது, மேலும் அந்த துறையில் பணிசெய்த ஆய்வாளர்களுக்கு அவர் ஒரு தூண்டுகோலாகவும் இருந்தார், என்று கூறினார்.

இந்திய பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இரு அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு அமைப்பு, ஒன்று விண்வெளிக்கு வெளியே பயணிக்கும் போதே ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், மற்றொன்று புவி மட்டத்திற்குள் நுழைந்த பின்பு தாக்கும், இவை இரண்டையும் பல முறை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பினர் சோதனை செய்து விட்டனர்.

இந்த ஏவுகணை மூலம் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியும், பொதுவாக இவ்வகை ஏவுகணைகளே அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும்.

குறிப்பிட நாடுகளிடமே இவ்வகை பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உபயோகத்தில் உள்ளது.